இப்போட்டியில் இருபது அணிகள் பங்குபெற்று விளையாடின. இறுதி போட்டியில் ப்ரெண்ட்ஸ் (friends) லெவன் அணியும், அபுதாபி சேலஞ்ஜ்ஸ் (AD Challenge) அணியும் விளையாடின. நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவரில் ப்ரெண்ட்ஸ் லெவன் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.
அணியின் சார்பில் அசாா் 73 ரன்களும், அஸ்ரப் 23 ரன்களும் எடுத்தாா்கள் மேலும் அபுதாபி சேல்ஞ்சஸ் பௌலர் அா்சத் இரண்டு விக்கெட் கைப்பற்றினா்.
பின்னர் ஆடிய அபுதாபி செலேஞ்சர்ஸ் அணி 17.4 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து கோப்பையை கைப்பற்றியது. அந்த அணியின் சாா்பில் தவ்பிக் 66 ரன்கள் எடுத்தாா். ப்ரெண்ட்ஸ் லெவன் பௌலர் சாஜித் இரண்டு விக்கெட் கைப்பற்றினா் மேலும் இந்த போட்டியை சிறப்பாக நடத்திய ராதாகிருஷ்னன், சிராஜ், சாசத், சாஜித், ஜமால் மற்றும் பி.எஸ்.காஜா முகைதின் ஆகியோருக்கு நன்றி தெறிவிக்கப்பட்டது.
Congratulations & Keep it up !!!
ReplyDelete