வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதை அடுத்து, சாலையோர வியாபாரிகளுக்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் 25 குடைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்தலைவர் எஸ்.ஏ.சி இர்பான் சேக் தலைமை வகித்தார். மண்டலச் செயலர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், மண்டல பொருளர் இன்ஜினியர் ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்து குடைகளை வழங்கினார்கள். அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் முதல் சேது பெருவழிச்சாலை, சிவன்கோயில் மார்க்கெட், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, கடைத்தெரு வரை உள்ள பழங்கள், பூ, காய்கறி விற்பவர் செருப்பு தைக்கும் தொழிலாளி உள்ளிட்ட சாலை வியாபாரிகளுக்கு இலவசமாக 25 குடைகள் வழங்கப்பட்டன.
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் சாகுல்ஹமீது, மாவட்டத்தலைவர்கள் முஹம்மது முகைதீன், எஸ்.ஏ அப்துல் ஹமீது, பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், ஆஃப்ரின் நெய்னா முஹம்மது, மேஜர் முனைவர் எஸ்.பி கணபதி, சாரா அகமது, சாகுல் ஹமீது, முன்னாள் தலைவர்கள் என்.யூ.ராமமூர்த்தி, செல்வராஜ், ஆறுமுகச்சாமி, முத்துசாமி, உறுப்பினர்கள் கே. இத்ரீஸ் அஹமது, அதிரை மைதீன், அப்துல் ரஹ்மான், கலீல் ரஹ்மான், நிஜாமுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
"குடை."வள்ளல்கள் வாழ்க.!"
ReplyDeleteஅதிரைபுகாரி
"குடை."வள்ளல்கள் வாழ்க.!"
ReplyDeleteஅதிரைபுகாரி
This comment has been removed by the author.
ReplyDeleteSuch a Good job
ReplyDelete