பட்டுக்கோட்டை ரஞ்சி வாட்ச்ஸ் லயன் ஆர். எழிலரசன் ஏற்பாட்டின் பேரில்,
பட்டுக்கோட்டை லயன்ஸ் சங்கம் - மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.
முகாமிற்கு லயன்ஸ் சங்கத் தலைவர் சிவநாடிமுத்து தலைமை வகித்தார். முகாமில் 560 பேர்கள் கலந்துகொண்டார்கள். இவர்களுக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் முழுமையான கண் பரிசோதனைகளை செய்தனர். இதில் 145 பேர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டனர். பின்னர்ச சிகிச்சைக்காக இவர்கள் அனைவரும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நிறைவில் லயன்ஸ் சங்கப் பொருளர் நமசு ராஜா நன்றி கூறினார். மேலும் உணவு ஏற்பாடு செய்துகொடுத்த ரஞ்சி வாட்சஸ் லயன் ஆர் எழிலரசனுக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இம்முகாமில் பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் எஸ்ஆர் ஜவஹர் பாபு, லயன்ஸ் சங்க நிர்வாகிகள் டாக்டர் பாலகிருஷ்ணன், பி.ஆர் பெருமாள், அன்பு வே. ராமலிங்கம், ஜி.கே சுரேஷ், ஏ.கணேஷன், டாக்டர் சபா சுப்ரமணியன், கே. கலியபெருமாள், தியாகராஜன், கே.டி.கே,ஜி முருகேசன், எஸ்.சுகுமார், இன்ஜினியர் ஸ்ரீராம் உள்ளிட்ட லயன்ஸ் சங்கத்தினர், ரோட்டரி சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
ஐயா.என் பெயர் சரண்யா.பட்டுகோட்டை பகுதியில் வசிக்கிறேன்.தற்போது TNPSC அறிவித்திருக்கும் பரிட்சிக்கான இலவச பயிற்சியை என் போன்ற ஏழை மாணவ மாணவிகளுக்கு செய்து தர ஒரு வேண்டுகோளாக கேட்டுகொள்கிறேன் ஐயா. திக்கற்று இருக்கும் இளைய சமுதாயம் பயன் பெற உதவுங்கள் ஐயா...நன்றி🙏
ReplyDelete