அஜ்மானில் தமிழகத்தைச் சேர்ந்த முகம்மது அலி என்பவரால் கடந்த ஆண்டு டியர் ஹெல்த் செண்டர் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மருத்துவ நிலையம் அஜ்மான் ரமதா ஓட்டல் பிளாக் ஸ்கொயர் பின்புறம் அமைந்துள்ளது.
இந்த மருத்துவ நிலையத்தில் பொது மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட துறைகள் இருக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த மகப்பேறு டாக்டர் மீனாட்சி கதிர்வேல் அவர்களை தலைமையாகக் கொண்டு மக்கப்பேறு மருத்துவ துறை தொடங்கப்பட இருக்கிறது. மேலும் இரண்டாம் ஆண்டையொட்டி நடைபெறும் சிறப்பு விழாவில் ஷேக் அப்துல் முனேம் பின் நாசர் அல் நுயைமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார். மேலும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
காலை 9 மணி முதல் இலவச மருத்துவ பரிசோதனை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவ நிலைய மேலாளர் தமீமுல் அன்சாரி உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்து வருகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு எண்:
06 7471 335

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.