அபுதாபி: நவ-05
அபுதாபியில் இருந்து திருச்சிக்கு புதிய நேரடி விமான சேவையை ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம் இயக்க இருக்கிறது. இந்த புதிய விமான சேவையானது வரும் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.
இத்தகவலை ஜெட் ஏர்வேய்ஸ் விமான நிறுவன இயக்குநர் கவுரங் செட்டி கூறியதாவது :
இந்தியாவைச் சேர்ந்த ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு விமான சேவையை இயக்கி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த பயணிகளின் கோரிக்கையை ஏற்று வரும் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் இயக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் அமீரகம் மற்றும் வளைகுடாவைச் சேர்ந்த பயணிகள் எளிதில் தென் இந்திய பகுதிகளுக்கு செல்ல முடியும்.
இந்த நிறுவனம் அபுதாபியின் எதிகாத் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் 18 நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. அடுத்த ஆண்டு முதல் அபுதாபி மற்றும் இந்தியா இடையிலான விமான சேவையானது வாரத்துக்கு 28 கூடுதல் சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி
வரும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் புதுடெல்லிக்கு தினமும் இரண்டாவது விமான சேவையினை தொடங்க இருக்கிறது. ஏற்கனவே ஒரு முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் இரண்டு முறை புதுடெல்லிக்கு நேரடி விமான சேவை இருக்கும்.
மேலும் அபுதாபியில் இருந்து கேரளாவின் கண்ணூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களுக்கும் அடுத்த ஆண்டு புதிய விமான சேவைகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கான அனுமதி கிடைத்தவுடன் அது குறித்த முழுமையான அறிவிப்பு வெளியிடப்படும்.
தற்போது ஜெட் ஏர்வேய்ஸ் மற்றும் எதிகாத் ஆகிய விமான நிறுவனங்கள் அபுதாபியில் இருந்து இந்தியாவின் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கோழிக்கோடு, கோவா, புதுடெல்லி, ஐதராபாத், ஜெய்ப்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மங்களூரு, மும்பை, புனே மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு விமான சேவையினை இயக்கி வருகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டு மட்டும் 3.3 மில்லியன் பயணிகள் இந்த சேவையினை பயன்படுத்தியுள்ளனர். கடந்த 2014&ஆம் ஆண்டில் 2 மில்லியன் பயணிகள் சென்றனர். இதன் மூலம் 63 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வரவேற்பு
தமிழகத்தின் திருச்சி நகருக்கு புதிய விமான சேவையை ஜெட் ஏர்வேய்ஸ் விமானம் அறிமுகம் செய்திருப்பதை பலரும் வரவேற்றுள்ளனர். இது குறித்து அபுதாபி அய்மான் அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சி. ஹமீது கூறியிருப்பதாவது : புதிய விமான சேவைக்கு வரவேற்பு தெரிவித்தார். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஏற்கனவே அபுதாபியில் இருந்து திருச்சிக்கு விமான சேவையை இயக்கி வந்தது. எனினும் இந்த விமான சேவையானது கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. பயணிகள் அதிகமாக இருந்து விமான நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. மீண்டும் இந்த விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.