.

Pages

Tuesday, November 15, 2016

காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை துவக்கம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா !

அதிராம்பட்டினம், நவ-15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை ( என்சிசி ) துவக்கம் மற்றும் நடைபயிற்சி, அணி வகுப்பு பயிற்சி, மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.மகபூப் அலி தலைமை வகித்தார். பள்ளி தேசிய மாணவர் படை பொறுப்பாளர் முனைவர் ஆ. அஜ்முதீன் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் மேஜர் பி. கணபதி கலந்துகொண்டு பேசுகையில்; 
மாணவர்கள் பள்ளியில் படிக்கும் போது சமுதாய சேவை செய்வதை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும். தேசிய மாணவர் படை நாட்டுப் பற்றையும், உயர்ந்த ஒழுக்கத்தையும், விழிப்புணர்வையும் அதிகரிக்கச் செய்வதுடன், தலைமை பண்புகளையும் வளர்க்கும். இதனால் ராணுவத்துக்கு இணையான மதிப்பும், மரியாதையும் மாணவர்களுக்கு கிடைக்கும்.

பள்ளிப் பருவத்தில் என்சிசியில் சேர்ந்து சேவை புரிவது எதிர்காலத்தில் உயர்கல்வி படிக்கும் போதும், வேலைகளுக்கும் சலுகைகளை அளிக்கும். எனவே பள்ளி பருவத்தில் தேசிய மாணவர் படையில் சேர்ந்து சேவை புரிய மாணவர்கள் முன்வர வேண்டும்' என்றார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தேசிய மாணவர் படையில் புதிதாக இணைந்த 25 மாணவர்களுக்கு அணிவகுப்பு பயிற்சி, நடைப் பயிற்சி அளிக்கப்பட்டது. முடிவில் பள்ளி தேசிய மாணவர் படை பொறுப்பாளர் முனைவர் ஆ. அஜ்முதீன் நன்றி கூறினார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.