காரைக்குடி - திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதை, 711 கோடி ரூபாய் செலவில், அகல ரயில் பாதையாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. அதற்காக, இப்பாதை, 2012ல் மூடப்பட்டது. இத்திட்டத்தில், காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே உள்ள, 73 கி.மீ., துாரத்தில், 40 கி.மீ., துாரம் மட்டுமே ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதியில், பாதை மற்றும் நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
மேலும், பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையே, 74 கி.மீ., துார பாதை அமைக்கும் பணி, மந்தகதியில் நடந்து வருகிறது. இதற்கு, நிதி பற்றாக்குறை தான் காரணம் என்பதால் ஒப்பந்ததாரர்கள் பணியை தொடரவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், தாமதமின்றி ரயில் பாதை பணியை முடிக்க வேண்டும் என, தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தற்போது, பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையே, அதிராம்பட்டினம், திருநெல்லி காவல் நிலையம், யார்டு, மாங்குடி, மாவூர் சாலை, அம்மனுார், ஆலத்தம்பாடி யார்டு கட்டடங்கள், நடை மேம்பாலம் ஆகியவற்றை, 17.26 கோடி ரூபாய் செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பாதையில், தில்லைவிளாகம் மற்றும் முத்துப்பேட்டையில் நிலைய கட்டடம், பிளாட் பாரங்கள், நடை மேம்பாலங்கள், பிளாட் பார மேற்கூரை ஆகியவை, 19.23 கோடி செலவில் கட்டப்பட உள்ளன. மொத்தம், 36.49 கோடி ரூபாய் செலவிலான இப்பணிகளை, 10 மாதங்களுக்குள் முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு, தெற்கு ரயில்வே அழைப்பு விடுத்துள்ளது.
நன்றி: தினமலர்
It's looks like no train stop at all.
ReplyDeleteஇது மக்கள் காதுகளில் பூ சுத்தும் வேலை!
ReplyDelete