பிற அரபு நாடுகளைப் போலவே ஓமனிலும் பெட்ரோல் சில்லறை விற்பனை விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் 2018 ஜனவரி மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்பட்டுள்ளது என்றாலும் இந்த விலை ஏற்றம் மக்கள் மத்தியில் அதிருப்தியளிக்க கூடிய ஒன்றாகவே உள்ளது. இந்த விலை உயர்வால் டீசலை எரிபொருளாக கொண்டு இயங்கும் தொழிற்சாலைகளும் கனரக வாகனங்களும் பாதிக்கப்படும்.
அடைப்புக்குறிக்குள் கடந்த மாத விலை ஒப்பீட்டுக்காக தரப்பட்டுள்ளது.
டீசல் 1 லிட்டர் : 230 பைசா (219 பைசா)
M 91 1 லிட்டர் : 199 பைசா (186 பைசா)
M 95 1 லிட்டர் : 213 பைசா (207 பைசா)
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்த 2016 ஆம் ஆண்டு டீசல் விலை 146 பைசாவாகவும் M 95 பெட்ரோல் 120 பைசாசாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2016 நவம்பர் மாதத்தில் தான் பெட்ரோலில் ஆக்டேன் அளவு 91 முதல் 95 வரை இருக்கும் M 91 வகை பெட்ரோல் ஓமனில் அறிமுகம் செய்யப்பட்டது.
பெட்ரோலிய பொருட்கள் மீது 2014 ஆம் ஆண்டு ஓமன் அரசு வழங்கிய மானியம் 840 மில்லியன் ஓமன் ரியால்களாக இருந்து 2015 ஆம் ஆண்டு 900 மில்லியன் ஓமன் ரியால்களாக உயர்ந்திருந்தது. இது கடந்த ஆண்டுகளில் மேலும் உயர்ந்திருக்கும்.
ஓமன் அரசு குறைந்த வருமானமுடைய ஓமன் நாட்டு மக்களுக்கு என சிறப்பு மானியத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி அமுல்படுத்தி வருகிறது. இதன்படி, ஓமனியர்கள் மாதந்தோறும் 200 லிட்டர் M 91 வகை பெட்ரோலை லிட்டருக்கு 180 பைசாவிற்குள் பெற்றுக் கொள்ளலாம்.
இதுவரை இத்திட்டத்திற்காக சுமார் 120,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு சுமார் 50,000 பெட்ரோல் மானிய அட்டைகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் இந்த விண்ணப்பங்கள் 200,000 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.