![]() |
| கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் |
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்த பெண்ணை போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தனர் அதிராம்பட்டினம் தமுமுகவினர்.
அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை குப்பம் பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தலைமையில், தமுமக அதிரை பேரூர் செயலர் எம்.ஆர் கமாலுத்தீன் மற்றும் இளைஞர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் துணிப்பை வைத்திருந்த ஒரு பெண்ணை மடக்கி சோதனை நடத்தினர். அவரிடம், 64 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. மேலும் கஞ்சா விற்பனை செய்து ரூ.500 ஆகியவற்றை கைப்பற்றினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மனைவி செல்லம்மாள் (வயது 60) என்பது தெரியவந்தது. இதுகுறித்து, அதிராம்பட்டினம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

We should bring this message to our district Collector attention then only we can banned this sale completely in our area
ReplyDelete