அதிராம்பட்டினம், ஜன.08
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இம்மீன்களை அதிராம்பட்டினம் கடைத்தெரு பெரிய மீன் மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், அதிராம்பட்டினம் கடலில் மீனவர் வலையில் சிக்கிய 'பேத்தை' இன வகை மீன் கடைத்தெரு பெரிய மீன் மார்க்கெட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டு வரப்பட்டது. சுமார் 5 கிலோ எடையில் அபூர்வ உருவம் கொண்ட மீனை வாடிக்கையாளர்கள் பலர் வியப்புடன் பார்வையிட்டு சென்றனர்.
இதுகுறித்து மீன் வியாபாரி முகைதீன் கூறியது;
மீனவர்களால் 'பேத்தை' மீன் என்ற பெயரில் அழைக்கப்படும் இவ்வகை மீன் ஆழம் குறைந்த கடல் பகுதியில் வாழ்கின்றன. இது மெதுவாக நீந்தக்கூடியது. நீர் அல்லது காற்றைக்கொண்டு தனது உடலை ஊதிப்பெருக்கும் ஆற்றல் வாய்ந்தது' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.