அதிரை நியூஸ்: ஜூன் 10
புனித கஃபத்துல்லாஹ் அமைந்துள்ள புனிதப்பள்ளியின் மேல்மாடியிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9.20 மணியளவில் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் விழுந்தது தவாப் சுற்றும் மடஃப் பகுதி என்பதால் இவரது உயிர் உடன் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்ட நபர் ரிஸ்வான் பஜீல் என்கிற பாகிஸ்தானிய வம்சாவளி ஃபிரான்ஸ் தேசத்தவர் எனத்தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் ஏதும் தெரியவில்லை. மேலும் மேல்மாடியில் பாதுகாப்பிற்காக சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் மீது ஏறி இந்நபர் குதித்துள்ளார்.
இஸ்லாத்தில் எந்த சூழ்நிலையிலும் தற்கொலை செய்து கொள்வது அனுமதிக்கப்படவே இல்லை என்பதுடன் இறைவன் மன்னிக்காத பெரும் பாவம் என்றும், தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு நிரந்தர நரகமே கதி என்றும் எச்சரிக்கின்றது. மேலும் இரத்தம் சிந்த தடைசெய்யப்பட்ட புனிததான ஹரம் ஷரீஃபில் இதுபோன்ற பாவச்செயல்களை செய்வது நரகின் வேதனையை அதிகப்படுத்தவே செய்யும்.
கடந்த வருடம் ஒருநபர் புனிதப் பள்ளியினுள் தீக்குளிக்க முயன்றபோது பாதுகாப்பு படைவீரர்களால் தடுத்து காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.