அதிரை நியூஸ்: ஜூன் 11
முஹமது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை கூறும் 'தி மெஸேஜ்' என்ற திரைப்படம் முதன்முதலாக அரபு நாடுகளில் திரையிடப்படுகின்றது.
1976 ஆம் ஆண்டு லெபனான் வம்சாவளி அமெரிக்கரான முஸ்தபா அக்காத் என்பவரால் அரபி மற்றும் ஆங்கிலத்தில் முஹமது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றில் நடைபெற்ற பிரதான சில சம்பவங்களை கோர்வையாக எடுத்துக்கூறும் 'The Message - தி மெஸேஜ்' (தூது) என்ற திரைப்படம் அரபியிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாக வேறு வேறு நடிகர்களை வைத்து இயக்கி, தயாரிக்கப்பட்டது. அரபியில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு 'ரிசாலா' (Risala) எனப் பெயரிடப்பட்டிருந்தது.
இத்திரைபடத்தில் முஹமது நபி (ஸல்) அவர்களையோ, அவர்களது உன்னதத் தோழர்களான 4 கலீபாக்களையோ உருவகப்படுத்தாமல் காட்சிகளில் வரும் பிற கதாபாத்திரங்கள் முஹமது நபி (ஸல்) அவர்களை நோக்கி பேசுவதை போன்ற கட்சிகளை கொண்டு மட்டுமே உணரச் செய்யப்பட்டது. இத்திரை வடிவத்திற்கான அனுமதியை எகிப்தில் செயல்படும் அல் அஸ்கர் இஸ்லாமிய பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்கள் சில வழங்கியிருந்தன.
உலகெங்கும் மிகவும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் சவுதி அரேபியா, அமீரகம் உள்ளிட்ட பல அரபு நாடுகளிலும் தடைசெய்யப்பட்டது. இத்திரைப்படம் அன்றைய கால தொழில்நுட்பமான டால்பி ஸ்டீரியோ (Dolby Stereo) நுட்பத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது தற்போது இன்றைய நவீன தொழில்நுட்பமாக 4K Resolution, 5.1 வெர்சனில் மேம்படுத்தப்பட்டு அரபு நாடுகளில் இரு மொழிகளிலும் மறுவெளியீடு செய்கிறார் இயக்குனர் முஸ்தபா அக்காதின் மகன் மாலிக் அக்காத். அமீரக திரையரங்குகளில் முதன்முதலாக எதிர்வரும் ஜூலை 14 ஆம் நாள் முதல் திரையிடப்படுகிறது.
1976 ஆம் ஆண்டு வெளியான 'தி மெஸேஜ்;' ஆங்கில திரைப்படத்தை பழைய வடிவில் காண...
https://archive.org/details/TheMessageEnglishVersion
2013 ஆம் ஆண்டு தமிழகத்தில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு DVD வடிவில் மட்டும் ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படத்தை காண...
https://archive.org/details/TheMessage1977Tamil
உருது மொழிமாற்றத்தில் காண...
http://www.dailymotion.com/video/x2djmjf
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.