அதிரை நியூஸ்: ஜூன் 07
துபையில் வரும் புதிய கல்வியாண்டு கட்டணத்தை தனியார் பள்ளிகள் உயர்த்த தடை
துபையில் நடப்பு அமீரக பள்ளிகளுக்கான கல்வியாண்டு கடந்த ஜூன் 5 ஆம் தேதியுடன் மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதியுடனும் நிறைவடைகிறது. இந்நிலையில் 2018ஃ2019 புதிய கல்வியாண்டு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதியும் மாணவர்களுக்கு செப்டம்பர் 2 முதலும் துவங்குகின்றன.
அதேவேளை தனியார் துறை பள்ளிகள் குறிப்பாக இந்திய பள்ளிகள் இந்திய பள்ளிகளின் பாடத்திட்டங்கள் மற்றும் அரசுத்தேர்வுகளை அனுசரித்து நடத்தப்படுவதால் நடப்பு ஏப்ரல் 2 ஆம் தேதியே துவங்கிவிட்டன. இது ஓருபுறமென்றால் அமீரகத்தில் வீழ்ந்து வரும் வேலைவாய்ப்புக்கள் மற்றும் வாட் வரிகள் போன்றவற்றால் பெற்றோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் பல பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தாயகங்களுக்கு அனுப்பும் முடிவுகளை எடுத்ததால் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டிடும் வகையில் நடப்பு கல்வியாண்டிற்கான (2018ஃ19) கல்விக் கட்டணத்தை ஏற்றக்கூடாது என துபையின் பட்டத்து இளவரசர் ஹம்தான் பின் முஹமது தலைமையில் கூடிய நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலப்பதிவு கட்டணங்களை குறித்த தேதியில் கட்டாதவர்களுக்கு விதிக்கப்பட்டு வரும் அபராதங்கள் 60 நாட்களுக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளதால் இனி அவர்கள் அபராதமின்றி கட்டணங்களை செலுத்தலாம்.
இதேபோல் விமானத்துறை மற்றும் ஜெட் லேண்டிங் தொடர்புடைய 19 வகையான கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மேலும் தற்போது பல்வேறு துறைகளில் துபை மாநகராட்சியால் வசூலிக்கப்பட்டு வரும் 5 சதவிகித வர்த்தக வரியை 2.5 சதவிகிதமாக குறைக்கவும், அத்தகைய சேவைகளை இனங்காணவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.