.

Pages

Thursday, August 1, 2019

22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஹஜ் சேவையை துவக்கியது அமெரிக்க விமானம்!

அதிரை நியூஸ்: ஆக. 01
1997 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட சவுதிக்கான அமெரிக்க விமானங்களின் சேவை 22 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் துவங்கியது.

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம் கொலம்பஸ் நகரிலிருந்து 168 ஹஜ் யாத்ரீகர்களுடன் மியாமி ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த முதலாவது விமானம் ஜித்தா கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விமான நிலையத்தில் ஹஜ் பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பை சவுதி அதிகாரிகளும் அமெரிக்க துணை தூதரக அதிகாரிகளும் வழங்கினர்.

22 ஆண்டுகளுக்கு பின் ஒரு அமெரிக்க விமான நிறுவனம் சேவையை துவக்கியுள்ளது பிற அமெரிக்க விமான நிறுவனங்களும் சவுதிக்கான சேவையை துவக்க நல்ல தூண்டுகோலாக அமையும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: 1997 ஆண்டு ஏன் நிறுத்தப்பட்டது என்பது குறித்த விளக்கம் காணக்கிடைக்க வில்லை, அறிந்தவர்கள் பதிவிடவும்.

Sources: Saudi Gazette & Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.