அதிராம்பட்டினம், பிப்.08
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சேக்கனா எம்.நிஜாமுதீன் என்பவர் அண்மையில் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில்;
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், அதிராம்பட்டினம் ~ மகிழங்கோட்டை கிராம இணைப்புச் சாலை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்காததால் மிகவும் பழுதடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி தருகிறது. இச்சாலையை கடந்து செல்லும் வர்த்தகர்கள், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள், கிராம மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழை காலங்களில் சாலைகளின் பள்ளங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதால் துர் நாற்றம் வீசுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலால் இந்த சாலை மேலும் சேதமடைந்துள்ளது. எனவே, இந்த சாலையை தரம் உயர்த்தி சீரமைத்துதர பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
தமிழக முதல்வரால் இவரது கோரிக்கை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவருக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது. இதில், அதிராம்பட்டினம் - மகிழங்கோட்டை வழியாக தொக்காளிக்காடு சாலையை ரூ. 3.12 கோடியில், மாவட்ட சாலையாக தரம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டு ஒப்பந்தம் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாவும், விரைவில் இதன் பணிகள் தொடங்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.