.

Pages

Monday, February 24, 2020

அதிராம்பட்டினத்தில் மினி மாரத்தான் ஓட்டப்போட்டி (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.24
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 65-வது ஆண்டு விளையாட்டு விழாவை முன்னிட்டு,  6 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மினி மாரத்தான் ஓட்டப்போட்டி, கிழக்கு கடற்கரைச்சாலையில் இன்று (24-02-2020) திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

ஓட்டப்பந்தயத்தை, கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முனைவர் கே.முருகானந்தம் கொடியசைத்து தொடங்கி வைத்துப் பேசினார். 50 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ஒட்டப்பந்தயம், கல்லூரி நுழைவாயிலிருந்து புறப்பட்டு, கிழக்கு கடற்கரைச்சாலை, ராஜாமடம் வரை சென்று மீண்டும் அதே வழியாக கல்லூரியை வந்தடைந்தது.

இதில். முதல் 5 இடங்களைப் பிடித்த மாணவர்கள் எம். தேவேந்திரன், எஸ்.கதிரேசன், ஏ.வெற்றிச்செல்வன், ஜி.ராகவன், பி.வீரச்செல்வன் ஆகியோருக்கு எதிர்வரும் (05-03-2020) அன்று நடைபெறும் கல்லூரி ஆண்டு விளையாட்டு விழாவில் பரிசுகள் வழங்கி பாராடப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில், கல்லூரிப் பேராசிரியர்கள் என்.சேகர், எம்.பிரேம் நவாஸ், ஜெ.முகமது அலி, எஸ்.அப்பாஸ், எம்.பழனிவேல், கார்த்திகேயன், விஜயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.