.

Pages

Sunday, February 16, 2020

அதிராம்பட்டினத்தில் புதிதாய் மலர்ந்தது JK வுட் ஒர்க்ஸ் & மர இழைப்பகம்!

அதிராம்பட்டினம், பிப்.16
அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எஸ். ஜாகிர் ஹுசைன். இவர்,  அதிராம்பட்டினம், ஆதம் நகர், கிழக்கு கடற்கரைச்சாலை பிலால் நகர் இரயில்வே கேட் அருகில் JK வுட் ஒர்க்ஸ் & மர இழைப்பகம் எனும் புதிய தொழில் நிறுவனத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி உள்ளார்.

திறப்பு விழாவில் ஊர் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தி மகிழ்ந்தனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் எஸ். ஜாஹிர் உசேன் கூறியது;
அதிநவீன இயந்திரங்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த தொழில் நிபுணர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தில் பர்னிச்சர்கள், இன்டீரியர் டெக்கரேஷன் வேலைகள், நிலைக்கதவுகள், ஜன்னல்கள், கட்டில் பீரோ, டிரஸ்ஸிங் ஸ்டேண்ட், டைனிங் டேபிள் உள்ளிட்ட அனைத்து விதமான மர வேலைகளும் செய்து தரப்படுவதுடன் சிறப்பான முறையில் அனைத்து விதமான மரங்களும் உடனுக்குடன் இழைத்துத் தரப்படும்.

மேலும், இத்தொழிற்கூடத்திலேயே பெஸ்ட் எஞ்சினியரிங் & வெல்டிங் ஒர்க்ஸ் என்றதொரு நிறுவனமும் இயங்கி வருவது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனாகவும், சிரமத்தை குறைப்பதாகவும், ஓரிடத்திலேயே அனைத்து தேவைகளையும் எளிதாக நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப்பகுதி பொதுமக்கள் எங்கள் நிறுவனம் வளர்ச்சியடைய தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

தொழில் ரீதியான தொடர்புக்கு:
6382036441, 9629978709
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.