.

Pages

Saturday, February 8, 2020

அதிராம்பட்டினம்~பட்டுக்கோட்டை வழித்தடத்தில் புதிய பேருந்துகள் இயக்கம்!

அதிராம்பட்டினம், பிப்.08
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மண்டலத்துக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை போக்குவரத்து பணிமனை நிர்வாகத்தின் கீழ்  அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டைக்கும், பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினத்திருக்கும் தினமும் 'பாயின்ட் டூ பாயின்ட்' அரசு விரைவுப் பேருந்து கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. தினமும் இந்த பேருந்துகளில் ஏராளமானப் பயணிகள் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக போக்குவரத்துதுறை சார்பில், இந்த வழித்தடத்தில் இயக்குவதற்கு புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பழைய பேருந்துகள் நிறுத்தப்பட்டு, புதிய பேருந்துகளின் இயக்கம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை தொடங்கியது.

இந்நிகழ்வில், அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எம்.ஏ முகமது தமீம், முன்னாள் கவுன்சிலர் சிவக்குமார், ஹாஜா பகுருதீன், முத்துக்கருப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, இந்தவழித்தடத்தில் புதிய பேருந்து இயக்குவதற்கு அனுமதி அளித்த தமிழக முதல்வர் அவர்களுக்கும், பரிந்துரை செய்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.