.

Pages

Saturday, February 8, 2020

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 423 பேருக்கு பணி நியமன ஆணை!

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தஞ்சாவ10ர் மாவட்ட நிர்வாகம் இணைந்து தனியார்த்துறையில் வேலை வாய்ப்பு முகாம் 08.02.2020 சனிக்கிழமை மன்னர் சரபோஜி அரசினர் கலைக் கல்லூரியில் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள 10-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, நர்சிங், தொழிற்கல்வி, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் என மொத்தம் 1500-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர். 77 தனியார்த் துறை நிறுவங்களை சேர்ந்த மனிதவள மேம்பாட்டு அலுவலர்களால் (HR Manager) நேர்காணல் நடத்தினர்.

இதில் 423 நபர்களுக்கு பணிநியமனம் ஆணை வழங்கப்பட்டது. 267 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கும், 71 நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் பணி நியமன ஆணைகளை வழங்கினார் மேலும் அரசால் வழங்கப்படும் பல்வேறு பயிற்சிகளை பெற்றுக்கொள்வதோடு, தற்போது பெற்றுள்ள இப்பணிவாய்ப்பில் சேர்ந்து வாழ்வில் முன்னேற வேண்டுமென வாழ்த்தி பேசினார்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், திருப்பூர் மற்றும் சென்னை போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த தனியார் நிறுவனங்களான MINDA GROUP OF COMPANIES, SP Textiles, SIMHO, BSA CORPORATION, TVS SERVICE, EQUITAS BANK உள்ளிட்ட 77 நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள், சேவை நிறுவனங்கள், தனியார் வங்கிகள், கணினி மென் பொருள் நிறுவனங்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிறுவனங்கள், இயற்கை அழகு சாதன விற்பனை நிறுவனங்கள் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் பங்கேற்றனர்.

இதில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் செ.ரமேஷ்குமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் மு.ராஜ்குமார், திட்ட அலுவலர்கள் (மகளிர் திட்டம்) மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.