.

Pages

Saturday, February 22, 2020

பட்டுக்கோட்டையில் ரயில்வே துறை வேலைவாய்ப்பு குறித்து கருத்தரங்கம்!

பட்டுக்கோட்டை, பிப்.22
பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரி, பட்டுக்கோட்டை கோட்டை ரோட்டரி சங்கம் பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கம்  ஆகியவை இணைந்து இரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கம் ஏனாதி ராஜப்பா கல்லூரியில் 22. 2 .2020 சனிக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கோட்டை ரோட்டரி சங்க தலைவர் எம்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை வட்ட இரயில்  பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் முன்னிலை வகித்தார் .

ரோட்டராக்ட் சங்க தலைவரஜே.பிரசன்ன வெங்கடேஷ் வரவேற்றுப் பேசினார். தட்சிண இரயில்வே யூனியன் துணை பொதுச்செயலாளர் டி. மனோகரன் ரயில்வே நிர்வாக அமைப்புகள், அதில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றியும், வேலைக்கு விண்ணப்பிக்கும் முறைகள் பற்றியும் கலந்துரையாடல் மூலம் விளக்கமளித்து பேசினார்.

கருத்தரங்கில் சுமார் 250 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட துணை ஆளுநர் ஞா.ஜெயசீலன் பேராசிரியர் எஸ் பி எஸ் ராஜா, பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் துணைத்தலைவர் கா.லெட்சுமி காந்தன் ஒருங்கிணைப்பாளர் எம் கலியபெருமாள், சங்கர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர் ரெஜினால்ட் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிறைவில், பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் செயலாளர் வ.விவேகானந்தம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.