2019~2020ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் (தடகளம், நீச்சல், கூடைப்பந்து, வாலிபால், கபாடி, ஹாக்கி, ஜுடோ, குத்துச்சண்டை, இறகுப்பந்து மற்றும் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகள்) இருபாலருக்கும் மாவட்ட அளவில் 18.02.2020 முதல் 20.02.2020 முடிய நடத்தப்படவுள்ளது.
இதன் முதற்கட்டமாக கூடைப்பந்து, வாலிபால், கபாடி, ஹாக்கி, ஜுடோ, இறகுப்பந்து மற்றும் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கு (18.02.2020) இன்று தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்தராவ் துவக்கி வைத்தார்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெறும் குழுப்போட்டிகளில் வாலிபால் விளையாட்டில் 11 ஆண்கள் அணிகளும், 8 பெண்கள் அணிகளும் (228 நபர்கள்), ஹாக்கி விளையாட்டில் 4 ஆண்கள் அணிகளும், 4பெண்கள் அணிகளும் (144 நபர்கள்), கூடைப்பந்து விளையாட்டில் 12 ஆண்களும். 8 பெண்களும் (240 நபர்கள்), கபாடி விளையாட்டில் 11 ஆண்கள் அணிகளும், 6 பெண்கள் அணிகளும் (204 நபர்கள்) இறகுப்பந்து விளையாட்டில் 20 ஆண்களும், 12 பெண்களும் (32 நபர்கள்), டென்னிஸ் விளையாட்டில் 4 ஆண்கள் அணிகளும், 2 பெண்கள் அணிகளும் (24 நபர்கள்) ஜுடோ போட்டியில் 16 ஆண்களும் 27 பெண்களும் ஆக மொத்தம் (915 நபர்கள்) வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு முதலிடத்தை பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை தலா ரூ.1000/-வீதமும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.750/-வீதமும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.500/- வீதமும் ஆக மொத்தம் ரூ.4,53,500/- வழங்கப்படவுள்ளது.
குழுப்போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளில் சிறந்த நபர்களை தேர்ந்தெடுத்து மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தடகளம், நீச்சல், குத்துச்சண்டை மற்றும் ஜுடோ ஆகிய விளையாட்டில் முதல் மூன்று இடத்தை பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுமதிக்கப்படுவர். மாநில அளவில் கலந்துகொண்டு வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா தொகை ரூ.1,00,000/-வீதமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.75,000/-வீதமும், மூன்றாம் பரிசாக தலா தொகை ரூ.50,000/- வீதமும் வழங்கப்படும்.
இவ்விழாவில் மேற்குறிப்பிட்ட தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு கழக பொறுப்பாளர்கள், விளையாட்டுப் பிரிவு பயிற்றுநர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், பத்திரிக்கை நிருபர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.இராமகிருட்டிணன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மு.தேன்மதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். முன்னதாக, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சு. அந்தோணி அதிஷ்டராஜ் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் நிறைவில் தஞ்சாவூர் மாவட்ட வாலிபால் பயிற்றுநர் செ. மகேஷ்குமார் நன்றியுரை கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.