அதிராம்பட்டினம், பிப்.13
புதுச்சேரி மாநிலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய புதுச்சேரி முதலமைச்சருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே.ராஜிக் முகமது நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது;
இந்திய மக்களை மதத்தின் அடிப்படையில் பிரித்து மத வன்முறையைத் தூண்டும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை 11 மாநில முதலமைச்சர்கள் எதிர்த்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 12-02-2020 அன்று குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்.ஆர்.சி.., என்.பி.ஆர் போன்ற கருப்புச் சட்டங்களை எதிர்த்து புதுச்சேரி மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் ஏற்கனவே வாக்களித்தபடி குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.
மக்களின் மனநிலையை புரிந்து அதிலுள்ள நியாய தர்மங்களை உணர்ந்து அதற்கேற்ற வகையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இந்த கருப்புச் சட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.
மத்திய அரசு, தனது ஆட்சியைச் கலைத்தாலும் அதுகுறித்து அஞ்சமாட்டோம்! என்றும் மக்களின் நலனே முக்கியம் என்கிற ரீதியிலும், இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மனமார பாராட்டுகின்றது.
மக்களுக்காக நடத்தப்படும் மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் நல்லாட்சி புரியும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.