அதிராம்பட்டினம், பிப்.22
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, தொடா் போராட்டம் கடந்த (பிப்.19) புதன்கிழமை மாலை அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் தொடங்கி, சனிக்கிழமை 4-வது நாளாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஜமாத் மற்றும் கிராம பஞ்சாயத் நிர்வாகிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை 3-வது நாள் நடந்த போராட்டத்தில், வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா (திமுக), மவ்லவி ஹாரூன், மகேந்திரன் (காங்கிரஸ்), திருச்சி ரபீக் (தமுமுக), முஸ்தபா (சி.எப்.ஐ) உட்பட பலர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, 50 க்கும் மேற்பட்ட பழனிபாபா மாணவர்கள் இந்திய தேசியக்கொடியை கையில் ஏந்தி, சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் க்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு, அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு, பேருந்து நிலையம், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக போராட்ட களத்திற்கு பேரணியாக வந்தனர். அதேபோல், 50 க்கும் மேற்பட்ட கடற்கரைத்தெரு மஹல்லா இளைஞர்கள் கடற்கரைத்தெருவிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு ஹாஜா நகர், கிழக்கு கடற்கரைச்சோலை வழியாக போராட்ட களத்திற்கு வந்தனர்.
போராட்ட களத்தில் பங்கேற்ற பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மத்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீா்மானம் நிறைவேற்றி, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆா்) ஆகிய பணிகள் நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது செல்லிடப்பேசியில் விளக்கை எரியவிட்டவாறு முழக்கமிட்டனா்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.