மதுக்கூர், பிப்.26
மதுக்கூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், டெல்லி வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து, கண்ணில் கருப்புத் துணி கட்டியும், கைகள், தலையில் கட்டுப்போட்டும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும் தொடர்ந்து 10-வது நாளாகத் தொடர் காத்திருப்பு போராட்டம், மதுக்கூர் பள்ளிவாசல் தெருவில் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தில், எஸ்டிபிஐ கட்சி மாநிலப் பேச்சளார் திருச்சி ஹசன் இமாம், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் அஷ்ரப், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் அர்ஷாக் வழக்காடு, தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அலாவுதீன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இதில், திரளானப் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.
முன்னதாக, டெல்லி வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், கலவரக்காரர்களை கைது செய்யக்கோரியும், சிறுவர்கள் உள்ளிட்ட பலர் கண்ணில் கருப்பு துணி கட்டியும், கைகள், தலையில் கட்டுப்போட்டும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.