.

Pages

Saturday, February 8, 2020

காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!


தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை இன்று (பிப்.08) சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் பலருடைய வாட்ஸ் அப்-ல் வந்த மெசஜில் திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் ELFIN E-Com Private Ltd என்ற நிறுவனத்தால் EOP (ELFIN Opportunity programme) என்ற நிகழ்ச்சி தஞ்சாவூர் நகரம் SENGO HALL ல் நடைபெறும் என்றும் அதில் அதிகளவில் கலந்து கொள்ளவும் அதன் மூலம் அதிகளவில் வருமானம் ஈட்டவும் முடியும் என்ற போலியான, கவர்ச்சியான, ஏமாற்றும் நோக்கத்துடன் செய்தி வெளியிட்டுள்ளனர்.

மெசஜ் பெற்ற பட்டுக்கோட்டையை சார்ந்த ஒருவர் நிகழ்ச்சி நடைபெறும் SENGO HALL சென்று அங்கிருந்த ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன வெங்கடேசன் ELFIN E-Com Private Ltd Trichy என்பவரை மேற்படி நிகழ்ச்சி திட்டம் பற்றி விபரம் கேட்டதற்கு ரூபாய் 12 ஆயிரம் கட்ட வேண்டும் என்றும் அத்துடன் மேலும் இரண்டு நபர்களை சேர்த்துவிட வேண்டும் என்றும், அதற்கு ஈடாக கவர்ச்சிகரமான வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள், துணிமணிகள், சுற்றுலா ஏற்பாடுகள், வீட்டுமனைகள் இவற்றில் ஏதாவது ஒன்று வழங்கப்படும் என்றும் பொய்யான வாக்குறுதியை வழங்கி மேற்படி நபரிடமிருந்து ரூபாய் 12,000 ஐ பெற்றுக் கொண்டார். ஆனால் பணம் பெற்றுக் கொண்டதற்கு ரசீது தரவில்லை பணத்தை திருப்பி கேட்டதற்கு மேற்படி நபரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ELFIN E-Com Private Ltd நிறுவனத்தின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

விசாரணையில் ELFIN E-Com Private Ltd மன்னார்புரம், திருச்சி என்ற நிறுவனமானது மத்திய அரசு சட்டம் The Prize chits and Money Circulation  Schemes (Banning) Act-1978 மற்றும் தமிழ்நாடு அரசின் The Tamil Nadu Direct Selling Guidelines Order,2018–க்கு விரோதமாக இயங்கி வருவது தெரியவருகிறது.

இவ்வாறு Multilevel Marketing (MLM) மூலம் பொது மக்களுக்கு நேரடியாக ரசீது இல்லாமல் பொருட்களை விற்பனை செய்தல், சேவைகளை வழங்குதல், பொதுமக்களை கவர்ச்சிகரமான, போலியான வாக்குறுதிகள் மூலம் உறுப்பினராகவோ, சந்தாதாரராகவோ, Sponsor ஆகவோ Pyramid திட்டத்தில் சேர்ப்பதன் மூலம், ஒரு சிலருக்கு மட்டுமே பணபலன்கள் கிடைக்கும் வகையில் பணச்சுழற்சி முறையில் ஈடுபடுத்துதல் சட்டப்படி குற்றம். எனவே பொதுமக்கள் யாரும்  மேற்படி திட்டத்தில்  சேர வேவண்டாம் எனவும், மேலும் இது போன்ற மோசடி வலைகளில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் துறைக்கு  தெரிவிக்கும்படி தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.