.

Pages

Thursday, February 20, 2020

மாநில கைப்பந்து போட்டிக்கு தகுதிபெற்ற அதிரை ESC அணி வீரர்களுக்கு பாராட்டு!

அதிராம்பட்டினம், பிப்.20
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் கடந்த (18.02.2020) அன்று தொடங்கியது. இதில், மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்தராவ் போட்டியை தொடங்கி வைத்தார்.

கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பட்டிஸ்வரன், மேலஉளூர், கும்பகோணம், தஞ்சாவூர், அய்யம்பேட்டை, வல்லம், பேய்கரம்பன் கோட்டை, பூண்டி உள்ளிட்ட 11 ஆண்கள் அணிகளும், 8 பெண்கள் அணிகளும் (228 நபர்கள்) கலந்துகொண்டு விளையாடின.

இதில், இறுதிப்போட்டியில் அதிராம்பட்டினம் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப், பட்டுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய இரு அணிகள் மோதின. ஆட்ட இறுதியில், பட்டுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வின்னர் பட்டத்தையும், அதிராம்பட்டினம் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் ரன்னர் பட்டத்தையும் தட்டிச்சென்றன. முதலிடம் பிடித்த வீரர்களுக்கு தலா ரூ.1000/-வீதமும், இரண்டாமிடம் பிடித்த வீரர்களுக்கு தலா ரூ.750/-வீதமும், பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

இதில், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிராம்பட்டினம் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் நட்சத்திர வீரர்கள் எம்.அல் அமின், மஹ்ரூப், டி.அல் அமின் ஆகியோர் மாநில அளவில் நடைபெறும் கைப்பந்து போட்டிக்கு செல்ல தகுதி பெற்றுள்ளனர்.

இதையடுத்து, அதிராம்பட்டினம் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள், விளையாட்டு ஆர்வலர்கள் சார்பில் நடந்த பாராட்டு விழாவில், அதிராம்பட்டினம் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வீரர்கள் எம். அல் அமீன் (கேப்டன்), மஹ்ரூப். டி. அல் அமீன், தவ்பீக், சபீக், அகமது ஜாஸ், அஸ்லம், ஜிப்ரில், சேக் நசுருதீன், முனாஸ், சேக் நசுருதீன் மற்றும் அணியின் பயிற்றுநர் முகமது சாலிகு உள்ளிட்டோருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டி மகிழ்ந்தனர்.

மாநில அளவில் கலந்துகொண்டு வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா தொகை ரூ.1,00,000/-வீதமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.75,000/-வீதமும், மூன்றாம் பரிசாக தலா தொகை ரூ.50,000/- வீதமும் வழங்கப்படும்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.