அதிராம்பட்டினம், பிப்.08
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளைகளின் சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றிற்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகில் (07-02-2020) வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே.ராஜிக் முகமது தலைமை வகித்தார். அவ்வமைப்பின், மாவட்டச் செயலாளர் வல்லம் பாட்சா, மாவட்ட பொருளாளர் எம்.அஸ்ரப் அலி, மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்லா, அதிராம்பட்டினம் கிளைகளின் நிர்வாகிகள் எம்.நவாப்ஷா, ஹபிபு ரஹ்மான், கே.நசுருதீன், பஜால் முகைதீன், அப்துல் ஜப்பார், சிராஜுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக, அவ்வமைப்பின் மாநிலப் பேச்சாளர் கோவை. ரஹ்மத்துல்லாஹ், 'அடக்கு முறை சட்டமும் சமுதாயமும்' என்ற தலைப்பிலும், அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர் முஜிபு ரஹ்மான், 'நமது அடுத்த இலக்கு' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.
கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும், பாதிப்புகளை ஏற்படுத்தும் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றிற்கு எதிராக அனைத்து சமுதாய மக்களும் போராடவேண்டும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது போல தமிழக சட்ட மன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்ப பெறக்கோரி, அறவழியில் போராடி வரும் மாணவர்கள் மீதும், பெண்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்திய சங்பரிவார அமைப்பை இந்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட சட்டமன்றங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது போல தமிழக சட்ட மன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்ப பெறக்கோரி, அறவழியில் போராடி வரும் மாணவர்கள் மீதும், பெண்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்திய சங்பரிவார அமைப்பை இந்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும், தமிழகத்தில் மத கலவரத்தை தூன்டும் வகையில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து பேசும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்தும், அதிமுக அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கவேண்டும், அதிராம்பட்டினம் பேரூர் பகுதி பிரதான சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், அதிராம்பட்டினம் பேரூராட்சி சாலைகளில் முன் அனுமதியின்றி ஆங்காங்கே சுவர்போல் எழுப்பி உள்ள வேகத்தடைகளினால் வாகன விபத்து ஏற்படுகிறது. எனவே, உயரமாக எழுப்பி உள்ள வேகத்தடையின் அளவை குறைத்து சீர்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காத அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டிப்பது என்றும், இக்கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும், நடவடிக்கை எடுக்க தாமதமாகும் பட்சத்தில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவில், கிளைத் தலைவர் எம்.நவாப்ஷா நன்றி கூறினார். இக்கூட்டத்தில், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.