.

Pages

Wednesday, March 25, 2020

அதிராம்பட்டினத்தில் திருமண வீட்டார் சென்ற வேன் ~ பைக் மோதல்; இருவர் பலி; 7 பேர் காயம்!

அதிராம்பட்டினம், மார்ச் 25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திருமண வீட்டார் சென்ற வேனும், இளைஞர் ஓட்டி  வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட  விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். வேனில் இருந்த 7 பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், டி.பள்ளப்பட்டியைச் சேர்ந்த பெண்ணுக்கும், திருத்துறைப்பூண்டி அருகே பின்னத்தூர் கிராமத்திலுள்ள மணமகனுக்கும் மார்ச் 29 ம் தேதி இடும்பாவனம் என்ற ஊரில் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், டி.பள்ளப்பட்டியிலுள்ள மணமகளுக்கு பரிசம் போட்டு முன்கூட்டியே பின்னத்தூருக்கு அழைத்து வந்து  திருமண நாளான மார்ச் 29 வரை தங்கள் உறவினர் வீட்டில் மணமகளை தங்க வைக்க மணமகன் வீட்டார் முடிவு செய்தனர்.

அதன்படி, மணமகன் வீட்டார் டி.பள்ளப்பட்டிக்குச் சென்று மணமகளுக்கு செவ்வாய்க்கிழமை பரிசம் போட்டு, பின்னத்தூருக்கு வேனில் அழைத்து வந்தனர். இந்த வேனில் மணமக்கள் மற்றும் உறவினர்கள் பயணித்தனர்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்த வேன் அதிராம்பட்டினம் கிழக்குக் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அதிராம்பட்டினம் கரையூர் தெரு மீனவர் சமுத்திரம் மகன் முத்து (18) என்பவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, வேன் பக்கவாட்டில் மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. விபத்தைத் தடுக்க வேன் ஓட்டுநர் பிரேக் போட்டதால் வேன் சாலையில் கவிந்தது.

இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற முத்து சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். வேனில் பயணித்த மணமகனின் உறவினர் முத்துப்பேட்டை ஒன்றியம், கீழநம்மங்குறிச்சி ஊராட்சி செயலர் சண்முகசுந்தரம் (39) என்பவர் பலத்த காயத்துடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் இறந்தார். மேலும்,
வேனில் இருந்த மணமக்களின் உறவினர்கள் 7 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்களும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக மணமக்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

தகவலறிந்த அதிராம்பட்டினம் போலீஸார் இளைஞர் முத்துவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.