அதிராம்பட்டினம், மார்ச் 17
அதிராம்பட்டினத்தில் கடந்த 28 நாட்களாக நடந்து வந்த தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக இன்று செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். சிஏஏ க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்ஆா்சி, என்பிஆா் ஆகிய பணிகள் நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பிப்.19 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் 28-வது நாளாக இன்று (17-03-2020) செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஜமாத் மற்றும் கிராம பஞ்சாயத் நிர்வாகிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வந்தனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், தேசிய பேரிடராக அரசு அறிவித்ததை அடுத்து, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, சிஏஏ க்கு எதிரான தொடர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுமாறு அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகள் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.
இந்நிலையில், தொடர் போராட்டம் தொடர்பாக, போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் அதிராம்பட்டினம் உலமாக்கள் ஆகியோர் இடையே ஆலோசனையில் ஈடுபட்டனர். நிறைவில், தொடர் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது எனவும், இந்தக் கோரிக்கைகளை தொடர்ச்சியாக அரசுக்கு வலியுறுத்தும் விதமாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து, அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் கடந்த 28 நாட்களாக தொடர்ந்து வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டதாக போராட்டக்குழு சார்பில், இன்று (17-03-2020) செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர், பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர், வட்டாட்சியர், துப்புரவு ஆய்வாளர் ஆகியோரிடையே போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையின் போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும், என்ஆா்சி, என்பிஆா் ஆகியவற்றிற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தவரும் பட்சத்தில், தற்போது நடந்த வந்த தொடர் போராட்டத்தை வீட மிகவும் வீரியமாக நடத்தப்படும் என எடுத்துரைத்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.