அதிராம்பட்டினம், மார்ச் 24
அதிராம்பட்டினத்திற்கு கடந்த 10 தினங்களில் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளவா்களை கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
வருவாய் ஆய்வாளர் ஆர். சரவணகுமார் மேற்பாா்வையில், அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் முகமது அசாருதீன், கிராம உதவியாளர்கள் பத்மநாபன், பாலா ஆகியோா் அடங்கிய சிறப்புக் குழுவினா் இப்பணியில் ஈடுபட்டனா்.
மாா்ச் 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை இத்தாலி, அமெரிக்கா, சிங்கப்பூா், துபை, அபூதாபி, தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து அதிராம்பட்டினம் திரும்பியுள்ள 22 நபா்களுக்கு கையில் அழியாத மை மூலம் திங்கள்கிழமை முத்திரை பதிக்கப்பட்டது. மேலும், இவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற போதிலும், அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனா்.
வெளிநாட்டிலிருந்து வந்துள்ளவா்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில், பொது நிகழ்ச்சிகள் அல்லது குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனா். இவா்களை சுகாதார பிரிவு அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து வருவா்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.