.

Pages

Thursday, March 19, 2020

கரோனா வைரஸ் தடுப்பு முகக்கவசம் தயாரிக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர் விளார் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக மாஸ்க் முகக்கவசம் தயாரிக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் நேரில் இன்று (19.03.2020) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விளார் கிராம பொது சேவை மையத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக மாஸ்க் முகக்கவசம் தயாரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:- 
தஞ்சாவூர் மாவட்டத்தில் வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கு தேவையான முககவசம் மாஸ்க் தயாரிக்கும் பணி மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக நடைபெற்றுவருகின்றது. நமது தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் 23 இடங்களில் மொத்தம் 150 தையல் இயந்திரங்களை கொண்டு மாஸ்க் தயாரிக்கும் பணி; நடைபெற்று வருகின்றது. நாளொன்றுக்கு 10 ஆயிரத்திலிருந்து 15000 மாஸ்க் தயாரிக்கும் பணி நடைபெற்றுவருகின்றது. இங்கு தயாரிக்கப்படும் மாஸ்க், கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். அதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவையை தவிர்த்து பொது இடங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பொது நிகழ்ச்சிகள், கூட்டங்கள், உணவகங்கள், உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. வெளியிடங்களில் செல்லும்பொழுது முககவசம் அணிந்து செல்ல வேண்டும். நாளொன்றுக்கு 10 முதல் 15 முறை தங்கள் கைகளை கழுவ வேண்டும். மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரியநாராயணன்,பிரபாகரன், விளார் ஊராட்சி மன்ற தலைவர் மைதிலி ஆகியோர் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.