தஞ்சாவூர் மார்ச்.16-
கொரோனா நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கும் விதமாக, ஊர் நுழைவு வாயிலில் கை, கால் கழுவ சோப்பு நீர், தண்ணீர் வசதி செய்துள்ள ஊராட்சி மன்றத் தலைவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சீனாவில் உருவாகி வேகமாக பரவி பலரது உயிரைப் பறித்து வந்த கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் கொடிய நோய் என்று சொல்லப்படுவதற்கு காரணமே, அதற்கு இன்னும் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாதது தான்.
எதுவாக இருப்பினும், வருமுன் காப்பதே சிறந்தது என்னும் பழமொழிக்கேற்ப, நம்மை கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்கு அன்றாட வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் சற்று அதிக கவனம் செலுத்தினால், எவ்வித நோயும் நம்மை அணுகாமல் தடுக்கலாம்.
கொரோனா பாதிப்பால் தமிழக அரசு சில அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. விமான நிலையங்கள் கண்காணிப்பில் உள்ளது. பல நாடுகளுக்கு விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளின் தரைவழி எல்லைகள் மூடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள செந்தலைவயல்
ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் ரகுமத்துல்லா, ஊருக்கு தேவையான அத்தியாவசியமான பணிகளை செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக கொரோனாவை தடுக்கும் விதமாக பேருந்து நிலையத்தில், விழிப்புணர்வு பதாகை, வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளியூருக்கு செல்பவர்கள், ஊருக்கு வருபவர்கள் அனைவரும். கை கழுவதற்காக டெட்டால் கிருமி நாசினி லிக்விட், மற்றும் சோப் வைக்கப்பட்டு, தற்காலிக தண்ணீர் குழாய் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஊருக்கு வருபவர்கள், வெளியூர் செல்பவர்கள் சோப்பிட்டு கை, கால்களை கழுவி, கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்துவரும் ஊராட்சி மன்ற தலைவர் ரகுமத்துல்லா மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இத்தகவல் முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட இணையத்தில் வைரலாகி வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.