.

Pages

Wednesday, March 18, 2020

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 76-வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 13/03/2020 அன்று இனிதே நடைபெற்றது. இதில், நமதூர் வாசிகள் பலரும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 :  அகமது அஷ்ரப்
முன்னிலை           :  S.சரபுதீன் (தலைவர்)
வரவேற்புரை       :  P. இமாம்கான் (கொள்கை பரப்பு செயலாளர்)
சிறப்புரை              : A.M.அஹமது ஜலீல் (செயலாளர்)
நன்றியுரை     : A. சாதிக் அகமது  (இணைத்தலைவர்)

தீர்மானங்கள்:
1) குடியுரிமை  சட்டத்திற்கு  எதிரான  தலைமையகம் எடுக்கும் எந்த ஒரு தீர்மானத்தையும் செயல்பாட்டினையும் முழு ஆதரவு தருவதென முடிவெடுக்கப்பட்டு அதற்கான ஓரிரு கருத்துக்களை தலைமையகத்திற்கு தெளிவுபடுத்தி அதனை விரைவில் செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் கடந்த 28 நாட்களாக நடைபெற்று வரும்  தொடர் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவர்களுக்காகவும் அதற்கான முழுவெற்றியடைய அனைவரும் இக்கூட்டத்தில் துஆ செய்யப்பட்டது.

 2) உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸிலிருந்து அனைவர்களுக்கும் பாதுகாப்பு அளித்திடுமாறு இக்கூட்டத்தில் துஆ செய்யப்பட்டது. மேலும் இந்த தொற்று நோய்க்காக இஸ்லாம் கூறும் தீர்வுகளையும்  உபதேசங்களையும் தெளிவுபடுத்தப்பட்டது

3) ரியாத் கிளையிலுள்ள இரண்டு உறுப்பினர்களின் நகைக்கடன் அத்தியாவசிய  தேவையை உடன் பூர்த்தி செய்த தலைமையகத்திற்கு நன்றியினை இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரியாத் வாழ் அதிரை மக்களுக்காக ABMR-ன்  முழு ஒத்துழைப்பு எக்காலக்கட்டங்களிலும் அளிக்கப்படும் என உறுதி செய்யப்பட்டது.

4) மாதசந்தா மற்றும் வருடசந்தா விசயமாக இக்கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது. அதற்கான முழு ஒத்துழைப்பையும் முழு ஆதரவையும் அளிக்குமாறு  கேட்டுக் கொள்ளப்பட்டது.

5) இன்ஷா அல்லாஹ் வரும் ரமலானில் மே 1-ம் தேதி 7-ஆம் ஆண்டு இஃப்தார் மற்றும் மெகா கூட்டம் நிகழ்ச்சியில் அனைத்து சவுதி அதிரை வாழ் சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

6) இக்கூட்டத்தில் தங்களின் உழைப்பால் ஈன்ற பொருளாதாரத்தில் இந்த வருடம் ஜக்காத்,பித்ரா சதக்காக்களை சரியான முறையில் ஏழை மக்களை சென்று அடையும் வண்ணம் இஹ்லாஸான முறையில் செயல்பட்டு வரும் பொது சேவை நிறுவனங்களின் ஒன்றான அதிரை பைத்துல்மாலின் மூலம் தாங்கள் முழு ஒத்துழைப்பையும் பொருளாதார பங்கீட்டை செலுத்தி அதற்கான நன்மையடைந்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

7) சமீபத்தில் அதிரையை சேர்ந்த இரண்டு பெண்கள் இறையடிசேர்ந்த மர்ஹும் சகோதரி ஜுஹைரா அம்மாள் ( ABMR-ன் தலைவர் சகோ. சரபுதீன் சகோதரி ) மற்றும் ரியாதில் இறையடிசேர்ந்த சகோதரி. பரிதா பேகம் அவர்களுக்காகவும் துவா செய்யப்பட்டு ஆழ்ந்த இறங்களையும் தெரிவிக்கப்பட்டது.

8) இக்கூட்டத்தில் பல புதிய உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தார்கள் அதில் முன்னாள் தமாம் ABM-ன் கிளை பொருளாளர் ரியாஸ் அஹமது மற்றும் தமீம், அஸ்ரப், அயூப் (கட்டுமாவடி) அனைவர்களும் வந்து கலந்து கொண்டு பல கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள். இதில் கலந்து கொண்ட கட்டுமாவடியை சேர்ந்த சகோ: அயூப் அவர்கள் புதிய பைத்துல்மால் சேவையை கட்டுமாவடியிலும் நிறுவுவது சம்பந்தமாக ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கேட்டு அறிந்தார். இக்கூட்டத்தில் அவரின் ஆர்வத்துக்காக நன்றி தெரிவிக்கப்பட்டது.

9) இன்ஷா அல்லாஹ் வரும் அமர்வு APRIL 2020 10-ம் தேதி பத்ஹா RT- RESTUARENT முதல் மாடியில் மஃரிப்  தொழுகை முடிந்த பிறகு நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு நமதூர் வாசிகள் அனைவர்களும் முழு ஒத்துழைப்பு தந்து அல்லாஹ்வின் பொருத்தத்துடன் இந்த சேவையை சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணை செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.