.

Pages

Thursday, March 19, 2020

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 19
கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் கலந்துகொண்டு, பொதுமக்கள் தங்கள் கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கழுவுவது அவசியம் குறித்தும், காய்ச்சல் இருமல் போன்றவை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறக் கோரியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதையடுத்து, தங்களது கைகளை முழுமையாக கழுவும் முறை பற்றி அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் விளக்கிக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அருள் பிரகாசம், கிராம நிர்வாக அலுவலர் அசார் மற்றும் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.