.

Pages

Tuesday, March 31, 2020

அதிராம்பட்டினத்தில் போலீசார் வாகனச் சோதனை (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 31
அதிராம்பட்டினத்தில் ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல், காரணமின்றி வெளியே சுற்றி திரிந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகில் இன்று (31-03-2020) செவ்வாய்க்கிழமை மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரணமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிந்த 6 பேருக்கு அபாரதம் விதித்து கரோனா வைரஸ் தொற்று நோயால் சமூகத்திற்கு ஏற்படும் கடும் பாதிப்புகள் குறித்தும், அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டுமென அறிவுரை வழங்கியும், இனி இதுபோன்ற விதிமீறலில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதில், அதிராம்பட்டினம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காந்தி, தலைமைக்காவலர் கோவிந்தராஜ், ஆயுதப்படைக் காவலர் தர்மலிங்கம், காவலர்கள் ரேஷ்மா, அஸ்வினி, விசாலாட்சி உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.