அதிராம்பட்டினம், மார்ச் 31
கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வர்த்தகர்களுடனான விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் இ.ரவிச்சந்திரன் தலைம வகித்தார். அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் ஜெயமோகன், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்பரவு ஆய்வாளர் கே.அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அதிராம்பட்டினத்தில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மீன்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் தொற்று பரவாமல் தடுப்பதற்கு, பொதுமக்கள் இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருட்கள் வாங்குவதற்காக வரையப்பட்ட சமூக இடைவெளிக் கோடுகளை பின்பற்றுவது, கடைகளுக்கு முன்பாக கூட்டம் கூடுவதை தவிர்ப்பது, அரசு விதித்துள்ள விதிமுறைப்படி பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வது, கரோனா வைரஸ் தொற்றை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றுவது ஆகியவை குறித்து வர்த்தகர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில், அதிராம்பட்டினம் வர்த்தகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.