அதிராம்பட்டினம், மார்ச்.22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட மேலத்தெருவில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டி 5 லட்சம் லிட்டர் குடிநீரை சேமித்து வைக்கும் கொள்ளவை கொண்டவை. தினமும் மிலாரிக்காடு பகுதியிலிருந்து பெறப்படும் குடிநீர் இந்த நீர்தேக்க தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு மறுநாள் காலையில் மேலத்தெரு, கீழத்தெரு, வெற்றிலைக்காரத்தெரு, காட்டுப்பள்ளி தெரு, காலியார் தெரு, நடுத்தெரு ஒரு பகுதி, கடற்கரைத்தெரு, ஹாஜா நகர், புதுத்தெரு, முத்தம்மாள் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், அதிராம்பட்டினம் ஜாவியா சாலை, கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளில், ஏர்டெல் நிறுவன தொலைத்தொடர்பு கேபிள் பதிப்பிற்காக ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் சாலையின் ஆங்காங்கே குழிகள் தோண்டி வருகின்றனர். இதில், பெரிய ஜும்மா பள்ளிவாசல் அருகில் தோண்டப்பட்ட குழியால் பிராதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் ஆறுபோல் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால், அதிராம்பட்டினம் பேரூராட்சி 8, 9, 10 11, 12, 13, 14, 15 ஆகிய வார்டுகளின் குடியிருப்புதாரர்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை குடிநீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இன்று (மார்ச் 22) உலக முழுவதும் தண்ணீர் தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அதிராம்பட்டினத்தில் குடிநீர் வீணாகி சாலையில் ஓடிக்கொண்டிருப்பது பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் குழாய் உடைப்பை சீர் செய்யும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.