.

Pages

Tuesday, March 17, 2020

தஞ்சை மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

கொரோனா வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில். உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய்த் தொற்றாக (Pandemic) அறிவித்துள்ள நிலையில்.  தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்றபோதிலும், இந்த நோய் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதன் பேரிலும், தமிழக அரசின் தலைமைச் செயலர் அவர்களின் அறிவுரைகளின்படியும்  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ்  (16-03-2020) அனைத்துத் துறை அலுவலர்கள் கூட்டம் நடத்தி அலுவலர்கள், தனியார் மருத்துவமனைகள் நிருவாகிகள், இந்திய மருத்துவ கழக பொறுப்பாளர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் ஆகியோர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவாமல் தடுப்பதற்கு. நோய் கண்காணிப்புப்பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை. காவல்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவின்படி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 1751 அனைத்து வகையான பள்ளிகளில் செயல்பட்டு வந்த மழலையர் பள்ளிகள்  மற்றும் துவக்கப்பள்ளிகளுக்கு 31-03-2020 வரை   விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது,
மாவட்டத்தில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் துhய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், இப்பணிகளை கண்காணிக்க தனி அலுவலர்களை நியமிக்கவும் ஊரக வளர்ச்சி, நகராட்சி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது இடங்களில் குறிப்பாக கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு வருகை புரியும் மக்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை மக்கள் கூடும் இடங்களுக்கு வருவதை தடுக்க தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை (தொலைபேசி எண், 1077) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும். துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) அலுவலகத்திலும். அனைத்து வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் செயல்பட்டு வருகிறது. 

சார் ஆட்சியர் பட்டுக்கோட்டை                  04373 237247
வருவாய் கோட்ட அலுவலகம். தஞ்சாவூர்  04362  238033
வருவாய் கோட்ட அலுவலகம். கும்பகோணம்    0435  2430101
வட்டாட்சியர் அலுவலகம், தஞ்சாவூர்          04362 230456
வட்டாட்சியர் அலுவலகம், திருவையாறு  04362 260248
வட்டாட்சியர் அலுவலகம், பூதலூர்           04362 280097
வட்டாட்சியர் அலுவலகம், ஒரத்தநாடு          04372 233225
வட்டாட்சியர் அலுவலகம், பட்டுக்கோட்டை  04373 235049
வட்டாட்சியர் அலுவலகம், பேராவூரணி   04373 232456
வட்டாட்சியர் அலுவலகம், கும்பகோணம்          0435  2430227
வட்டாட்சியர் அலுவலகம், பாபநாசம்          04374 222456 
வட்டாட்சியர் அலுவலகம், திருவிடைமருதூர்  0435  2460187

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்களுக்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்கு தவிர்த்திட வேண்டும்,

கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள். நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதை தவிர்த்திடவேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை பேணவும். குறிப்பாக வீட்டிற்குள் நுழையும்போதும். அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவவேண்டும், கைகளை சுத்தம் செய்யாமல், முகத்தை தொடக்கூடாது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விடுமுறை நாட்களின்போது குழுவாக விளையாடாதவாறு கண்காணித்திடவேண்டும், வீட்டிற்குள் நுழைந்தவுடனும் அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவவேண்டும்.

கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டால்தான் வெற்றிபெற இயலும் என்பதை கருத்திற்கொண்டு அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடவேண்டும் எனவும், நோய்க்கான அறிகுறி உள்ளவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகுமாறும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.