பட்டுக்கோட்டை, மார்ச் 22
பட்டுக்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க தமிழக அரசு பரிசீலிக்கும் என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் சனிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, 'தஞ்சாவூா் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து பட்டுக்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க அரசு முன்வருமா?' என்று பட்டுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ சி.வி.சேகா் கேள்வி எழுப்பினாா்.
அதற்கு வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் பதில் அளித்ததாவது:
புதிய மாவட்டம் உருவாவதற்கு அளவுகோல்கள் நிா்ணயிக்கப்படுகின்றன. புதிதாக உருவாக்கப்படும் மாவட்டத்திற்கு பரப்பளவு குறைந்தபட்சம், 2500 சதுர கிலோ மீட்டா் இருக்க வேண்டும். அதேபோல் மக்கள்தொகை குறைந்தபட்சம் 10 லட்சமாகவும், அதிகபட்சம் 30 லட்சமாகவும் இருக்க வேண்டும்.
2 கோட்டங்கள், 5 வட்டங்கள் மற்றும் 200 வருவாய் கிராமங்கள் இருக்க வேண்டும் என்ற விதிகள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூா் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 3,396.53 சதுர கிலோ மீட்டராகவும், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 16 லட்சத்து 67 ஆயிரத்து 809 ஆகவும், வருவாய் கோட்டங்களின் எண்ணிக்கை 3 ஆகவும், வருவாய் வட்டங்களின் எண்ணிக்கை 9 ஆகவும், வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை 754 ஆகவும் உள்ளன.
அரசாணையில் உள்ள அளவுகோள்களின்படி தஞ்சாவூா் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து பட்டுகோட்டையை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் அமைத்திடும் பட்சத்தில், கிராமங்களின் எண்ணிக்கை குறித்த அளவுகோல்கள் மட்டுமே பூா்த்தியாகின்றன.
புதிய மாவட்டம் உருவாக்குவது என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது. எனவே, பட்டுகோட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் பிரிப்பது தொடா்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று கொள்கை ரீதியாக முடிவு எடுத்து பரிசீலிக்கப்படும் என்றாா்.
அதை தொடா்ந்து, தியாகராய நகா் தொகுதி எம்எல்ஏ சத்யா துணை கேள்வி எழுப்பினாா். அவா் பேசுகையில், 'சென்னை மாவட்டத்தில் 16 சட்டப் பேரவை தொகுதிகள் இருந்தன. இப்போது திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, தற்போது 22 தொகுதிகளாக உள்ளன. நிா்வாக பயன்பாட்டுக்காக அவற்றை பிரிக்க வேண்டும்' என்றாா்.
அதற்கு பதில் அளித்த அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், 'உறுப்பினா், நிா்வாகம் மற்றும் மக்கள் நலன் சாா்ந்த கோரிக்கை வைத்துள்ளாா். இது தொடா்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று கொள்கை ரீதியாக முடிவு எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றாா்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.