அன்புள்ள தஞ்சாவூர் மாவட்ட பொது மக்களுக்கு...
மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்கள் தொடர்ந்து அளித்து வரும் மேலான ஆதரவிற்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ குழுக்கள் இரவு பகலாக அற்பணிப்புடன் செயலாற்றி வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1185 பொது விநியோகத்திட்ட அங்காடிகளிலும் அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு “கொரோனா கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுக்கள்“ உருவாக்கப்பட்டு, அவர்கள் மூலம் பொது மக்களுக்கு அவரவர் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த “கொரோனா கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு“ வின் சேவைகளை பொது மக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வெளிநாடுகளிலிருந்து 5000-க்கு மேற்பட்ட நபர்கள் வீடு திரும்பியுள்ளதால், வைரஸ் நோய் வேகமாக பரவும் அபாயம் உள்ளதை தொடர்ந்து பொதுமக்கள் தங்களது அவசர கால பணிகளை தவிர, வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான உதவிக்கு “ நம்ம தஞ்சை “ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண். 1077 (Toll Free No) அல்லது தொலைபேசி எண். 04362-230121 அல்லது வாட்ஸ் ஆப் எண். 9345336838 என்ற எண்களை பயன்படுத்தி விபரம் தெரிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி....
ம.கோவிந்த ராவ், ஐ.ஏ.எஸ்.
மாவட்ட ஆட்சியர்,
தஞ்சாவூர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.