தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்புடைய துறைகள் மூலம் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று (26.03.2020) நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரால் காணொளி காட்சி மூலம் வழங்கப்பட்ட அறிவுரைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும், தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் தடையின்றி கிடைக்கச் செய்தல், வெளிநாடுகளிலிருந்து வந்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை தீவிரமாக கண்காணித்தல், மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் கிருமி நாசினி தெளித்தல், 144 தடை உத்தரவை செயல்படுத்துதல் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடர்புடைய துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.
இந்நிகழ்வுகளின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். குமுதா லிங்கராஜ், மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் (பொ) டாக்டர் ராணி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்து மீனாட்சி, மாவட்ட மலேரியா அலுவலர் போத்திப்பிள்ளை மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.