அதிராம்பட்டினம், கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் காசிம் அவர்களின் மகளும், மர்ஹூம் ஓடாவி காதர் நெய்னா பிள்ளை அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஓடாவி தாதா பிச்சை அவர்களின் மனைவியும், மர்ஹூம் பாருக் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் ஓடாவி முகைதீன் பிச்சை, அப்துல் ஜப்பார், இப்ராஹிம்ஷா ஆகியோரின் மருமகளும், கு.அ அப்துல் அஜீஸ் அவர்களின் சகோதரர் மகளும், ஹாஜா முகைதீன், ஜாஹிர் உசேன், ராஜ் முகமது, அஜ்மல்கான் ஆகியோரின் மாமியாரும், ஹாஜா முகைதீன், முஜுபுர் ரஹ்மான் ஆகியோரின் தாயாரும், முகமது காதர் மீரா, சர்வத்கான், அப்துல் ஹக்கீம், அகமது அசாருதீன், அகமது ஆத்திஃப் ஆகியோரின் பாட்டியாருமாகிய பரிதா அம்மாள் (வயது 70) அவர்கள் இன்று மாலை 4.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (17-03-2020) இரவு 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete