.

Pages

Thursday, March 26, 2020

ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகை குறித்த TNTJ அறிவிப்பு!

அதிராம்பட்டினம், மார்ச் 26
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகை குறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை அடுத்து, அதிராம்பட்டினம் உட்பட தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து தவ்ஹீத் பள்ளிவாசல்களில் ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகைகள் நடைபெறாது என அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை கே.ராஜிக் முகமது தெரிவித்தார்.

இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பது;
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கிருமி வேகமாக பரவி வருவதை நீங்கள் அறிவீர்கள். நோய் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றது.

இதை ஒட்டி மக்களை வீடுகளில் தொழுதுக் கொள்ளுங்கள் என்று மக்களுக்கு நமது ஜமாஅத் சார்பில்  விரிவாக விளக்கி வீடியோ பதிவும் வெளியிட்டிருந்தோம். அறிக்கை மூலமும் தெளிவுப்படுத்தியிருந்தோம். 

இந்நிலையில், நோய் தொற்றினால்  யார்?யார்? பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அறியமுடியாத சமுதாய தொற்று எனும் மூன்றாவது நிலையை இந்தியா-தமிழகம் அடைந்துள்ளதாக தற்போது அரசு தரப்பில்  அஞ்சப்படுகின்றது.

சமுதாய தொற்று உள்ள தற்போதைய சூழ்நிலையில் சிறிய அளவில் கூடுவதும் மக்களுக்கு ஆபத்தாக அமைந்து விடும் சூழல் உள்ளது.

அத்துடன், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து விட்டது. இதனை தொடர்ந்து மக்கள், பள்ளிவாசல் அல்லது மர்க்கஸ்களுக்கு  தொழுவருவதில் நடைமுறை சிக்கல்கள் அதிகமாக உருவாகியுள்ளன.

அதனால் இந்த சூழ்நிலையை கவனத்தில் கொண்டு நமது பள்ளிகள், மர்க்கஸ்களில் ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகைகள் நடைபெறாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஜும்ஆ தொழுகைக்கு பதிலாக வீடுகளில் லுஹர் தொழுமாறும், இயன்றவர்கள் வீட்டில் ஜமாஅத்தாக தொழுதுக் கொள்ளவும் என்று கேட்டுக் கொள்கின்றோம். நிலைமை சீரடைந்தபின் சூழலுக்கேற்ப தலைமை சார்பாக உரிய வழிகாட்டுதல் வழங்கப்படும். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேற்படி அறிவிப்பை அடுத்து, அதிராம்பட்டினம் உட்பட தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து தவ்ஹீத் பள்ளிவாசல்களில் ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகைகள் நடைபெறாது என அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை கே.ராஜிக் முகமது தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.