வெளிநாடுகளிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்துள்ள 516 பேர், அவர்களின் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு சுகாதாரத்துறை மூலம் 28 நாட்களுக்கு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருபவர்கள் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டிருந்தாலும், தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத்துறை மூலம் 28 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் விவரங்கள் விமான நிலையங்களிலிருந்து பெறப்பட்டு, அவர்கள் வரும் நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய் பாதிப்பைப் பொறுத்து மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றனர்.
22.03.2020 வரை தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்துள்ள 629 நபர்கள் சுகாதாரத்துறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, இதில் 106 நபர்கள் 28 நாட்கள் முடிவுற்ற நிலையில், 516 நபர்கள் சுகாதாரத்துறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்துள்ள 47 பேர் சுகாதாரத் துறை கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் நோய் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பாதிப்பு இல்லை என்றால் மீண்டும் ஆம்புலன்ஸ் மூலமாகவே தங்கள் இருப்பிடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர். வெளிநாட்டிலிருந்து வந்துள்ளவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும் பொது நிகழ்ச்சிகளில் அல்லது குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு நபரையும் கண்காணிப்பதற்கு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மூலம் பின்பற்றுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 28 நாட்கள் கண்காணிப்புக்கு உள்ளாகும் நபர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் இடது கையில் முத்திரை அச்சு வைக்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்துள்ள 516 நபர்கள் சுகாதாரத்துறை மூலம் தற்போது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி, கொரோனா நோய்த்தொற்று அறிகுறி உள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள், முகவரி, எண்ணிக்கை மற்றும் கண்காணிப்பு காலம் ஆகிய விவரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுடைய வீடுகளின் முன்புறம் ஒட்டப்பட்டுள்ளது. கொரோனா நோய்தொற்றுடன் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
காய்கறிகள், பால், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகளில் மூன்று மீட்டர் இடைவெளிவிட்டு வரிசையில் நின்று, பொருட்களை வாங்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் உத்தரவுகளை பின்பற்றி, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.