.

Pages

Thursday, March 12, 2020

அதிராம்பட்டினத்தில் 5 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 12
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கூரை வீடுகள் தீயில் கருகின.

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுரைக்கா கொல்லை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதன்கிழமை மதியம் திடிரென தீ பிடித்து மளமளவென பரவியதால் அடுத்தடுத்து 5 கூரை வீடுகளில் தீ பற்றியது. இதில், வசந்தி, நாகம்மாள், சாரதம், தெய்வானை, நாகம்மாள் ஆகியோரின் கூரை வீடுகள் தீயில் கருகி சாம்பலாகியது. இதனால், அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. பின்னர், அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து தீயை அணைத்தனர். இதனால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. பின்னர், பட்டுக்கோட்டை தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் நிகழ்விடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.