.

Pages

Wednesday, March 11, 2020

கைதான மாணவர்களை விடுவிக்கக்கோரி பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் சாலை மறியல் (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 11
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெறாத மத்திய அரசைக் கண்டித்தும், சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்  க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்தும் சாலை மறியல் போராட்டம் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச்சாலையில் புதன்கிழமை மதியம் நடைபெற்றது.

இதையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்நிலையில், மாணவர்களின் கைதைக் கண்டித்து பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கைதான மாணவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.