.

Pages

Wednesday, July 31, 2013

விபத்துக்கு காரணம் ஆட்டோவா !?

ஆட்டோ ரிக்சாவில் நீண்ட தூர பயணம் சாத்தியமா ?
தொலைதூர பயணம் மேற்கொள்பவர்கள். சொகுசாக செல்ல ஆசைப்படுவார்கள் அக்கம் பக்கத்தில் நெருக்கமாக இருப்பது அல்லது அதிகமான உடமைகளை கொண்டு செல்வது போன்ற காரணத்தால் தனியாக வாடகை வாகனம் எடுத்து செல்வதை நம்மவர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இது பாதுகாப்பனதும் மன அமைதியை தரும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. ஆனால் நாம் செல்லத் தேர்ந்தெடுக்கும் வாகனம் நமக்கு பாதுகாப்பான வாகனமாய் இருக்க வேண்டும். இதனை அதிகமானோர் மனதில் கொள்வதில்லை. வாடகைத் தொகை குறைவு என்ற ஒரே காரணத்திற்காக ஆட்டோ என்ற வாகனத்தை தேர்ந்தெடுத்து தன் உடமையையும் உயிரையும் மாய்த்து கொள்கின்றனர்.

* ஊருக்குள் ஒரு தெருவில் இருந்து மற்ற தெருவிற்கு செல்ல மட்டுமே. உதவும் சிறு வாகனம் மூலம் நீண்ட தூர பயணம் செய்வது அறிவீனமே. 

* பெரும்பாலன ஆட்டோ ஓட்டுனர்கள் வாகன சட்டம் அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

* மேலும் ஹைவே  ரோடுகளில் எப்படி வாகனத்தை இயக்குவது என்பதை அறியாதவர்கள். 

* முறையாக ஒட்டனர் பயிற்சி எடுக்காமல் நண்பர்கள் மூலம் ஆட்டோ ஓட்டும் பயிற்சி பெற்று அன்பர்களால் பல உயிர் சேதம் ஏற்படுகிறது.

* அதிவேக வாகனத்திற்கு நிகராக குறை வேக வாகனத்தை இயக்குவது அறிவீனம். 

* பம்பாய் போன்ற நகரங்களில் கனரக வாகனம் நடமாடும் இடங்களில் ஆட்டோ அனுமதி இல்லை .அந்தேரி போன்ற புறநகரில் மட்டுமே அனுமதி. 

* ஆட்டோவின்  வேகம் குறிப்பிட்ட அளவிற்கு மேல் செல்வது அபாயம். ஆனால் ஓட்டுனரோ அதில் பயணிக்கும் பயணியோ அறிவதில்லை. 

* இட நெருக்கமான் ஆட்டோவில் நீண்ட தூரம் பயணிப்பதை விட பேருந்தில் செல்வதே மேல். ஆட்டோவில் கதவு வசதி இல்லை சிறு பிள்ளைகளை வைத்துக்கொண்டு நெடுந்தூர பயணம் ஆபத்தானது. 

* கார்களில் முறையான ஓட்டுனர் பயிற்சி பெற்ற ஓட்டுனர்களை கொண்டு நீண்ட தூர பயணம் செய்யுங்கள்.

* லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் பயணிக்கும் சாலைகளில் ஆட்டோவில் நீண்ட தூரம் பயணிக்காதீர்கள்.

தொலைதூரங்களுக்கு செல்வதை தவிர்த்து நகரில் மட்டுமே ஆட்டோவில் பயணிப்பது அறிவான செயல் !

அதிரை சித்திக்
குறிப்பு : சமீபத்தில் அதிரையில் நடந்த மிகப்பெறும் விபத்திற்கு காரணமாக அமைந்த ஆட்டோவினால் ஏற்பட்ட ஆதங்கம் தலையங்கமாக தளத்தில் பதியப்பட்டுள்ளது.

ரமலானின் கடைசிப்பத்தை உயிர்ப்பிப்போம்!

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்:

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.  மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?.கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல் குர்ஆன் 97: 1-5)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!" என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 2014).
லைலத்துல் கத்ர் இரவை (ரமளானில்) கடைசி ஏழு நாள்களில் தேடுதல்:
இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானில்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது அப்போது, நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரை கண்ட விசயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவே, அதைத் தேடுபவர் (ரமளானில்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்!" என்று கூறினார்கள். (புஹாரி 2015).

அபூ சயீத்(ரலி) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஹ்திகாப் இருந்தோம், அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது.  எனவே நீங்கள் கடைசிப் பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலதுல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தாசெய்வது போல் (கனவு) கண்டேன்! எனவே, யார் என்னோடு இஹ்திகாப் இருந்தாரோ அவர் அவர் திரும்பவும் வரட்டும்" என்றார்கள்.  நாங்கள் திரும்பச் சென்றோம்.  வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட நாங்கள் காணவில்லை.  திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது.  அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது, அந்த கூரை பேரீச்சை மட்டையினால் அமைந்திருந்தது.  தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி(ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன்.  அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தைப் பார்த்தேன்.  (புஹாரி 2016)
கடைசிப் பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் லைலதுல் கத்ரை தேடுதல்:
இது பற்றிய ஹதீஸை உபாதா(ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ரமளானில் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரை தேடுங்கள்" என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 2017).

அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி(ஸல்) அவர்கள், ரமளான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாள்களில் இஹ்திகாப் இருப்பார்கள் இருபதாம் இரவு கழித்து மாலையாகி, இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தம் இல்லம் திரும்புவார்கள் அவர்களுடன் இஹ்திகாப் இருந்தவர்களும் திரும்புவார்கள். இவ்வழக்கப்படி நபி(ஸல்) அவர்கள் இரண்டு மாதம், எந்த இரவில் இல்லம் திரும்புவார்களோ அந்த இரவில் தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.  பின்னர் 'நான் இந்தப் பத்து நாள்கள் இஹ்திகாப் இருந்தேன் பிறகு கடைசிப் பத்து இஹ்திகாப் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது' எனவே, என்னுடன் இஹ்திகாப் இருந்த இடத்திலேயே தங்கியிருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு காட்டப் பட்டது பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, கடைசிப் பத்து நாள்களில் அதைத் தேடுங்கள்! (அந்த நால்களிலுள்ள) ஒவ்வொரு ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்! நான் ஈரமான களிமண்ணில் (அந்த இரவில்) ஸஜ்தா செய்வதுபோல் (கனவு) கண்டேன்!' எனக் குறிப்பிட்டார்கள்.  அந்த இரவில் வானம் இரைச்சலுடன் மழை பொழிய, பள்ளிவாசல் (கூரையிலிருந்து) நபி(ஸல்) அவர்கள் தோலும் இடத்தில் (மழை நீர்) சொட்டியது.  இருபத்தொன்றாம் இரவில் நடந்த இதை, நான் என் கண்களால் பார்த்தேன்! மேலும், நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தில் ஈரமான களிமண் நிறைந்திருக்க, சுப்ஹூ தொழுதுவிட்டுத் திரும்புவதையும் கண்டேன். (புஹாரி 2018).
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"(லைலதுல் கத்ரை) தேடுங்கள்" என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 2019).

நபி(ஸல்) அவர்கள் ரமளானில் கடைசிப்பத்து நாள்களில் இஹ்திகாப் இருப்பார்கள்' ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்!" எனக் கூறுவார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி 2020).
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
" ரமளானில் கடைசிப் பத்து நாள்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள்!' லைலதுல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்!" என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்(புஹாரி 2021).
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

" லைலதுல் கத்ர் இரவு கடைசி பத்து நாள்களில் உள்ளது அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது" என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 2022).
மக்கள் சச்சரவிட்டு கொண்டிருந்ததால் லைலத்துல் கத்ர் இரவு பற்றிய விளக்கம் நீக்கப்படுதல்:
உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்கள் கூறினார்கள்:
லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள்.  அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர்.  நபி(ஸல்) அவர்கள், "லைலதுல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன் அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்!" எனக் கூறினார்கள்(புஹாரி 2023)

ரமளானின் கடைசிப்பத்தில் புரிய வேண்டிய வணக்கம்:

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்:
(ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள் இரவை(அல்லாஹ்வைத் தொழுது) உயிர்பிப்பார்கள் (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!". (புஹாரி 2024).

- அதிரை தென்றல் (Irfan Cmp)

அதிரை அருகே தூக்கி வீசப்பட்ட பிறந்த சில மணி நேரமே ஆன இரட்டை குழந்தைகள் மீட்பு !

அதிரை கருங்குளம் நசுவினி ஆற்றின் மேற்கரையின் வழியே கருங்குளத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் இன்று [ 31-07-2013 ] அதிகாலை சென்றபோது பெரிய பாலித்தீன் பையொன்று கிடப்பதை அங்கு பார்க்கிறார்.  அதில் என்ன இருக்கிறது என்பதற்காக திறந்து பார்த்த போது பெட்சீட்டால் சுற்றிய நிலையில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண், பெண் என இரு குழந்தைகள் தொப்புள்கொடியுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார்.



பெட் சீட்டால் இறுக்கமாக மடித்து காணப்பட்ட இரு குழந்தைகளும் உயிர்க்கு போராடிக்கொண்டிருப்பதை பார்த்தவுடன் அதிரை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கிறார்.  காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துவிட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குழந்தையை கைப்பற்றிய 108 மருத்துவ செவிலியர்கள் முதலுதவி செய்துவிட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். ஆண்குழந்தை ஒரு கிலோ 200 கிராம் எடையும், பெண் குழந்தை ஒரு கிலோ 250 கிராம் எடையும் இருந்தன.

இதுகுறித்து அதிரை காவல்துறையினர் மேலும் விசாரித்து வருகின்றனர். இதனால் இந்தப்பகுதி முழுவதும் பரப்பரப்பாக காணப்பட்டன. மேலும் சில அடி தூரத்தில்தான் சேதுபெருவழிச் சாலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 30, 2013

குடி­நீரில் கழிவுநீரா !?

அதிரை 17 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சகோதரி ஒருவரிடமிருந்து தொலைபேசி வழியாக குடிநீர் தொடர்பான கோரிக்கை ஒன்று நம்மிடம் வந்தது. அதில் தங்கள் வீட்டிற்கு வரும் குடி­நீரில் கழி­வுநீர் கலந்து வரு­வதாக கவலையுடன் குறிப்பிட்டார்.

உடனே களத்தில் இறங்கிய அதிரை நியூஸ் குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரடியாகச் சென்று ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வின் இறுதியில் அந்த சகோதரி குறிப்பிட்டது உண்மைதான் என நிரூபணமாகியது.

இது­கு­றித்து அந்த சகோதரி நம்மிடம் மேலும் கூறியதாவது :
கடந்த சில நாட்களாக சோப்பு நுரையுடன் கூடிய கழிவுநீர் குடிநீரில் கலந்து வருவதால் குடி­நீரை குடிக்­கவே முடி­ய­ வில்லை. மேலும் துர்­நாற்றமும் வீசு­கி­றது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் வாய்ப்புள்ளது என்றார்.

இதுகுறித்து இந்தப்பகுதியின் வார்டு உறுப்பினர் சகோதரி ரபீக்கா முஹம்மது சலீம் அவர்களிடம் தொலைபேசியில் பேசிய வகையில்...
நீங்கள் குறிப்பிடும் சகோதரியின் சார்பாக கோரிக்கை பெறப்பட்டுள்ளது. அவர்களின் வீட்டிற்கு செல்லும் குடிநீர் இணைப்பில் மாத்திரம் பிரச்சனை ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக பேரூராட்சியின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. விரைவில் துரித நட­வ­டிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார் நம்பிக்கையுடன்.

விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி சிகிச்சை வழங்கப்படாததால், அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் !

கோட்டைப்பட்டினத்திலிருந்து அதிரை வழியாக தஞ்சாவூர் செல்லும் தனியார் பஸ் நேற்று [ 29-07-2013 ] பிற்பகல் 2.30 மணி அளவில் அதிரை அருகே கவிழ்ந்து 21 பெண்கள் உள்பட 42 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பஸ் அருகில் பனை மரம் மற்றும் மின் கம்பத்தில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.




இதில் பஸ்சில் பயணம் செய்த அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 47 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆட்டோவில் பயணம் செய்து படுகாயமடைந்த அதிரை சுரக்காய்கொல்லை தெருவை சேர்ந்த சேக் அலி (49), அதிரை புதுத்தெரு அலி மொய்தீன், பட்டுக்கோட்டை ஆட்டோ டிரைவர் பாலாஜி (23), பஸ்சில் பயணம் செய்த புதுவயல் சுசிலா (52), புதுப்பட்டினம் சுசிலா (40) ஆகியோர் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆட்டோ ஒட்டுனர் பாலாஜி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் மற்றவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

தகவல் அறிந்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ரெங்கராஜன் மற்றும் பட்டுக்கோட்டை நகர மன்றத்தலைவர் ஜவஹர் பாபு ஆகியோர் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்தனர். மேலும் மருத்துவரிடம் தீவிர சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டனர்.

பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள், நர்சுகள் இல்லை என்றும் சரியான சிகிச்சை மற்றும் முதலுதவி செய்யவில்லை என்றும் கூறி அதிரை கல்லூரி மாணவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உள்பட ஏராளமான பேர் ஆஸ்பத்திரி முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் முருகேசன், தாசில்தார் முத்துக்குமரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்கமலக்கண்ணன் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் சண்முகவேல், தென்னை நல வாரிய உறுப்பினர் மலைஅய்யன், முன்னாள் எம்.எல்.ஏ ராமச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வேலை நேரத்தில் போதிய டாக்டர்கள் இருக்க வேண்டும். ஸ்கேன் வசதி, போதிய உபகரணங்கள் மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் சரியான சிகிச்சை அளிக்காமல் தஞ்சை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பது நிறுத்த வேண்டும் என்று மறியல் நடத்தியவர்கள் கோரிக்கை வைத்தனர். அதிகாரிகள் அதை சரி செய்வதாக கூறியதன் பேரில் மறியல் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Monday, July 29, 2013

அதிரை பட்டுகோட்டை சாலையில் ஆட்டோ பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து! பலர் படுகாயம் .!

Flash News : பட்டுகோட்டை அதிராம்பட்டினம் சாலை காளிகோயில் அருகில் இன்று பகல் சுமார் 2.00 மணியளவில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது SRM பேருந்து மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்டதில்  பஸ் கவிழ்ந்து பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அரசு மருத்துவமனைக்கு அனைவரையும் அழைத்து சென்றுள்ளனர்.

விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் பூரண நலம் பெற துவா செய்வோமாக! 

மேலும் விரிவான செய்திகள் பின்னர் தளத்தில் பதியப்படும்.  









Saturday, July 27, 2013

அதிரையில் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்கம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி !

அதிரையில் இன்று [ 27-07-2013 ] மாலை 6 மணியளவில் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்கம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.



முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் நல சங்கத்தின் தலைவர் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் ஹாஜா ஷரீப், பொதுச்செயலாளர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, ,பொருளாளர் ஜெஹபர் சாதிக் ஆகிய நிர்வாகிகள் அன்புடன் வரவேற்றனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களுடன் நல சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதிரை பைத்துல்மாலின் தலைவர் - செயலாளர் உள்ளிட்ட சக நிர்வாகிகளின் அன்பான வேண்டுகோள் [ காணொளி ] !

அதிரை பைத்துல்மாலில் வட்டியில்லா நகைக் கடன் வழங்கும் திட்டம், கைவிடப்பட்ட முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான பென்ஷன் வழங்கும் திட்டம், ஏழைக்குமர்களுக்கான திருமண உதவி வழங்கும் திட்டம், வறிய  மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி வழங்கும் திட்டம் மற்றும் மருத்துவ உதவி சிறுவர்களுக்கு ஹத்னா செய்தல் ஆகியன சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இத்திட்டங்கள் யாவும் ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் ஜக்காத் நிதியைக்கொண்டும், கூட்டுகுர்பானி திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் நன்கொடைகளைக்கொண்டும் அல்லாஹ்வின் உதவியால் நடைபெற்று வருகின்றன. ஆகவே, நல்லுள்ளம் படைத்த தாங்கள் கடந்த வருடம்போல் இவ்வருடமும் தங்களுடைய ஜக்காத் மற்றும் பித்ரா நிதியை அதிரை பைத்துல்மாலுக்கு அதிகமதிகம் வழங்க சொல்லி அதிரை பைத்துல்மாலின் தலைவர் பேராசிரியர் S. பர்கத், செயலாளர் S. அப்துல் ஹமீது, துணைத்தலைவர்கள் வழக்கறிஞர் A. அப்துல் முனாப், A. முஹம்மது மொய்தீன், துணைச்செயலாளர்கள் O. சாகுல் ஹமீது, A.S. அப்துல் ஜலீல் மற்றும் ஆதம் நகர் மஹல்லாவின் நிர்வாகி E. வாப்பு மரைக்காயர் ஆகிய நிர்வாகிகள் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.

Friday, July 26, 2013

தக்வா பள்ளி புதிய மீன் மார்க்கெட் கட்டிடப்பணிக்கு உதவ அன்பான வேண்டுகோள் [ காணொளி ]

தக்வாப் பள்ளி மீன் மார்க்கெட்டை விரிவாக்கம் செய்து அதில் புதிய கட்டிடம் ஒன்றை மிகப்பிரமாண்டமாய் கட்டி எழுப்புவதென்று அதன் நிர்வாகிகளால் முடிவுசெய்யப்பட்டதை அடுத்து கடந்த [ 17-06-2013 ] அன்று காலை 7 மணியளவில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இதில் ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் முதல்வர் முஹம்மது குட்டி ஆலிம், ஜாவியா கமிட்டித்தலைவர் இக்பால் ஹாஜியார், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், தர்ஹா பேரவைத் தலைவர் நிஜாம் முஹம்மது, தக்வாப் பள்ளியின் முன்னாள் செயலாளர் உமர் தம்பி, அதிரை பேரூராட்சி உறுப்பினர்கள் ஆகியரோடு தக்வாப் பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியரோடு ஊர் முக்கியஸ்தர்களில் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாகவே கட்டுமானப்பணிகள் மும்முரமாக  நடைபெற்று வருகிறது. ஏராளமான கட்டுமான தொழிலார்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இத்திட்டத்தின் பொறியாளர் அனைத்து பணிகளையும் உடனிருந்து கவனித்தும் வருகிறார்.

கட்டுமானப்பணிக்குரிய செலவினங்களை பொறுப்பேற்றுக்கொள்ளும் படி நம்மின் ஆதரவை கோரியுள்ளனர். தக்வாபள்ளி நிர்வாகம் சார்பாக புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட்டின் புதிய கட்டிட வளாகத்திற்கு நிதி உதவி கோரி தக்வா பள்ளி நிர்வாகக் கமிட்டியின் சார்பாக வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு  :
K.S. அப்துல் சுக்கூர்
தலைவர் - தக்வாப் பள்ளி டிரஸ்ட்
Mobile : 9442759377

தக்வாப் பள்ளி டிரஸ்டின் வங்கி கணக்கு விவரம் :
Current A/c Name : THULUKKA PALLIVASAL TRUST
Bank Name : DHANALAXMI BANK 
Branch : ADIRAMPATTINAM 
Current A/c No. 011505300019316
IFS Code : DLXB0000115

மரண அறிவிப்பு [ காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் பேராசிரியர் அஹமது பாட்சா அவர்களின் மகன் ]


காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த 30 ஆண்டுகளாக வரலாற்றுத்துறை பேராசிரியராக பணிபுரிந்த மர்ஹூம் அஹமது பாட்சா அவர்களின் இரண்டாவது மகனும், சென்னை நியூ காலேஜில் பேராசிரியராக பணிபுரியும் பயாஸ் அஹமது மற்றும் சாகிர் ஆகியோரின் சகோதரருமாகிய அஸ்வாக் அவர்கள் இன்று [ 26-07-2013 ] காலை 8.30 மணியளவில் சென்னை தாம்பரம் மாடவாக்கம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை [ 27-07-2013 ] காலை 8 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.


தொடர்புக்கு :
பேராசிரியர் பயாஸ் அஹமது 9444192928
தகவல் : வாப்பு மரைக்காயர்

அதிரை பைத்துல்மாலின் கனிவான வேண்டுகோள் !

அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் சார்பாக  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

அதிரை பைத்துல்மாலில் வட்டியில்லா நகைக் கடன் வழங்கும் திட்டம், கைவிடப்பட்ட முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான பென்ஷன் வழங்கும் திட்டம், ஏழைக்குமர்களுக்கான திருமண உதவி வழங்கும் திட்டம், வறிய  மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி வழங்கும் திட்டம் மற்றும் மருத்துவ உதவி சுன்னத் உதவி ஆகியன சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இத்திட்டங்கள் யாவும் ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் ஜக்காத் நிதியைக்கொண்டும் கூட்டுகுர்பானி திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் நன்கொடைகளைக்கொண்டும் அல்லாஹ்வின் உதவியால் நடைபெற்று வருகின்றன. ஆகவே, நல்லுள்ளம் படைத்த தாங்கள் கடந்த வருடம்போல் இவ்வருடமும் அதிரை பைத்துல்மாலுக்கு தங்களுடைய ஜக்காத் நிதியை வழங்கி அல்லாஹ்வின் அளப்பரிய திருப்பொருத்தத்தை அடைந்துகொள்வீர்களாக. தங்களுக்கும் தங்கள் குடுபத்தார்களுக்கும் அல்லாஹ்  இம்மை மறுமைப் பேறுகளை வழங்கிடுவானாக ஆமீன். 
தாங்கள் அனுப்ப விரும்பும் ஜக்காத் நிதிகளை அதிரை பைத்துல்மாலின் கீழ்க்கண்ட அக்கவுண்ட்டில் செக்காகவோ, D.D. யாகவோ செலுத்தலாம்.    
                                           
1. ADIRAI BAITHULMAL, 
DHANALAKSHMI BANK, 
ADIRAMPATTINAM BRANCH, 
CURRENT A/C NO. 115-53-332

2. ADIRAI BAITHULMAL, 
CANARA BANK, 
ADIRAMPATTINAM BRANCH, 
S/B A/C NO. 120 110 102 3472

வஸ்ஸலாம்.

குறிப்பு : ABM-கிளைகள் கவனத்திற்கு  இதனை நகல் எடுத்து அதிரை வாழ் மக்களுக்கு கொடுத்து அவர்களின் ஜகாத் நிதியை அவர்களிடமிருந்து பெற்றிட வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்

அதிரை பைத்துல்மால்
No.23/1,நடுத்தெரு 
அதிராம்பட்டினம் - 614 701
தஞ்சை மாவட்டம்
போன்       : (+91) 04373 241690


Thursday, July 25, 2013

அதிரை லுக்மான்ஸில் ரமலான் மாத சிறப்பு தள்ளுபடி விற்பனை !

அதிரையில் கடந்த 13 ஆண்டுகளாக ஜவுளிகளை விற்பனை செய்து வரும் லுக்மான்ஸ் நிறுவனம் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்க இருக்கிறது. இதற்காக பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் அமைந்துள்ள இந்நிறுவனத்தில் புதிய வரவுகள் ஏராளமாக வரவழைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் உரிமையாளர் சேக் அலி அவர்களிடம் பேசிய வகையில்...
'எங்கள் நிறுவனத்தில் அனைத்து விதமான டெக்ஸ்டைல்ஸ், கைலிகள், கைக்குட்டைகள், ரெடிமேட்ஸ் சர்ட்கள், டவல்கள், பெண்களுக்கு புடவைகள், கைலிகள், தாவணிகள், மாணவ மாணவிகளுக்கான பள்ளிச்சீருடைகள் ஆகியன நவீன டிசைன்களில் சிறப்பு தள்ளுபடி விலையில் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.







குறிப்பு: அதிரை இளைஞரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் இலவசமாக தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது

நான்கு நாட்களுக்கு பிறகு அதிரையில் மீண்டும் குடிநீர் விநியோகம் !

அதிரை நகர மக்களுக்கு குடிநீர் சப்ளை அருகில் உள்ள விலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள அதிக திறன் கொண்ட நீர் மூழ்கி மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் எடுத்து அதிரையில் இருக்கிற நீர் தேக்கத் தொட்டிகளில் சேமித்து வைத்து வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இதில் ஏற்பட்டுள்ள பழுதுகளை குறிப்பாக வால்வுகளை புதிதாக மாற்றப்பட வேண்டி இருந்ததால் கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு தினங்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டது.

மேலும் குடிநீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளுக்கு ஒரு சில தன்னார்வலர்களால் டேங்கர் லாரிகளில் குடிநீர் விநியோகமும் செய்யப்பட்டு வந்தன. புதிய வால்வுகள் மாற்றியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் அதிரை நகரின் அனைத்து பகுதிகளுக்கும் மீண்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

சவூதி ரியாத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பெரும்திரளாக கலந்துகொண்ட அதிரையர் !

சவூதி ரியாத்தில் அதிரையரின் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி ஹாராவில் கடந்த [15-07-2013 ] அன்று மாலை நடைபெற்றது. இதில் ஏராளமான அதிரையர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிகுரிய ஏற்பாட்டை அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் சார்பாக செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.