.

Pages

Friday, July 26, 2013

தக்வா பள்ளி புதிய மீன் மார்க்கெட் கட்டிடப்பணிக்கு உதவ அன்பான வேண்டுகோள் [ காணொளி ]

தக்வாப் பள்ளி மீன் மார்க்கெட்டை விரிவாக்கம் செய்து அதில் புதிய கட்டிடம் ஒன்றை மிகப்பிரமாண்டமாய் கட்டி எழுப்புவதென்று அதன் நிர்வாகிகளால் முடிவுசெய்யப்பட்டதை அடுத்து கடந்த [ 17-06-2013 ] அன்று காலை 7 மணியளவில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இதில் ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் முதல்வர் முஹம்மது குட்டி ஆலிம், ஜாவியா கமிட்டித்தலைவர் இக்பால் ஹாஜியார், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், தர்ஹா பேரவைத் தலைவர் நிஜாம் முஹம்மது, தக்வாப் பள்ளியின் முன்னாள் செயலாளர் உமர் தம்பி, அதிரை பேரூராட்சி உறுப்பினர்கள் ஆகியரோடு தக்வாப் பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியரோடு ஊர் முக்கியஸ்தர்களில் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாகவே கட்டுமானப்பணிகள் மும்முரமாக  நடைபெற்று வருகிறது. ஏராளமான கட்டுமான தொழிலார்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இத்திட்டத்தின் பொறியாளர் அனைத்து பணிகளையும் உடனிருந்து கவனித்தும் வருகிறார்.

கட்டுமானப்பணிக்குரிய செலவினங்களை பொறுப்பேற்றுக்கொள்ளும் படி நம்மின் ஆதரவை கோரியுள்ளனர். தக்வாபள்ளி நிர்வாகம் சார்பாக புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட்டின் புதிய கட்டிட வளாகத்திற்கு நிதி உதவி கோரி தக்வா பள்ளி நிர்வாகக் கமிட்டியின் சார்பாக வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு  :
K.S. அப்துல் சுக்கூர்
தலைவர் - தக்வாப் பள்ளி டிரஸ்ட்
Mobile : 9442759377

தக்வாப் பள்ளி டிரஸ்டின் வங்கி கணக்கு விவரம் :
Current A/c Name : THULUKKA PALLIVASAL TRUST
Bank Name : DHANALAXMI BANK 
Branch : ADIRAMPATTINAM 
Current A/c No. 011505300019316
IFS Code : DLXB0000115

3 comments:

  1. துலுகாப்பள்ளி பள்ளியின் எதிர்கால வளர்ச்சியில் பங்கு கொண்டு வெளி உலகத்துக்கு இந்த செய்தியை பரப்பி அதிரை நியூஸ் நிஜாம் அவர்களுக்கும் அதன் நிருபர் மற்றும் மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீத் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி..!

    ReplyDelete
  2. துலுகாப்பள்ளி பள்ளியின் எதிர்கால வளர்ச்சியில் பங்கு கொண்டு வெளி உலகத்துக்கு இந்த செய்தியை பரப்பி அதிரை நியூஸ் நிஜாம் அவர்களுக்கும் அதன் நிருபர் மற்றும் மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீத் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி..!

    ReplyDelete
  3. துலுகாப்பள்ளி பள்ளியின் எதிர்கால வளர்ச்சியில் பங்கு கொண்டு வெளி உலகத்துக்கு இந்த செய்தியை பரப்பி அதிரை நியூஸ் நிஜாம் அவர்களுக்கும் அதன் நிருபர் மற்றும் மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீத் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி..!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.