மனுவில் கூறியிருப்பதாவது, எதிர்வரும் 09 July 2013 முதல் புனித ரமலான் மாத நோன்பு ஆரம்பமாக இருக்கின்றது, ஒரு மாத காலம் கணக்கிட்டு 10 August 2013 வரை அனைத்து இஸ்லாமியர்களும் கடைப்பிடிக்கக் கூடிய ஒரு முக்கியமான மாதமாகும்.
பகல் மற்றும் இரவு காலங்களில் கூடுதல் ஊழியர்களை பணியில் அமர்த்தி மின் தடங்கல் ஏற்படின் அதை உடன் சரிசெய்து தடையில்லா மின்சாரம் வழங்குமாறு பொதுமக்கள் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட அதிரை மின்சார வாரிய உதவி பொறியாளர் பிரகாஷ் அவர்கள் கூடுதல் ஊழியர்கள் நியமித்து நகரில் தடையில்லா மின்சாரம் வழங்க உதவுவதாக குறிப்பிட்டார்.
தகவலுக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி.
ReplyDelete'மனித உரிமை ஆர்வலர்' ஜமால் முஹம்மது காக்கா அவர்களின் ஆர்வ மிக்க இந்த பொதுத்தொண்டு பாராட்டப்பட வேண்டியவை. இதற்க்கான நன்மையை இறைவன் தாங்களுக்கு தந்தருள்வான்.
ரமலான் மாதத்திலாவது தடை இல்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் தான் கருணை காட்ட வேண்டும்.
கடந்த சில நாட்களாகவே என்.எல்.சி. ஊழியர்களின் ஸ்ட்ரைக் அதிரையிலும் எதிரொலித்துக்கொண்டுதான் உள்ளது. ஆம் அவ்வப்போது முன்னறிவிப்பில்லா மின்வெட்டு நகரில் அமல்படுத்தப்படுகிறது.
ReplyDelete'மனித உரிமை ஆர்வலர்' ஜமால் முஹம்மது அவர்களின் நியாமான கோரிக்கையை நிறைவேற்றித் தந்திட அதிரை மின்சார வாரியம் முயற்சியில் ஈடுபட வேண்டும். புனித ரமலான் மாத நோன்பு தினங்களில் கடந்த வருடத்தைபோல் இவ்வருடமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.
நற்காரியங்களை செய்வதற்கு முன்பே பப்ளிசிடியை விரும்புவோர் தாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்று தகவல் கொடுத்து தெருவெங்கும் நோட்டீஸ் ஒட்டி தடபுடலாக செய்வர்....
ReplyDeleteஆனால் ஜமால் காக்கா நற்காரியங்களை செய்துவிட்டு பின்பு இணைய தகவல்களை பரிமாரிகொண்டுள்ளார் அவர்களுக்கு ஜசக்கல்லாஹ் ஹைர்