அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் சார்பாக அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
அதிரை பைத்துல்மாலில் வட்டியில்லா நகைக் கடன் வழங்கும் திட்டம், கைவிடப்பட்ட முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான பென்ஷன் வழங்கும் திட்டம், ஏழைக்குமர்களுக்கான திருமண உதவி வழங்கும் திட்டம், வறிய மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி வழங்கும் திட்டம் மற்றும் மருத்துவ உதவி சுன்னத் உதவி ஆகியன சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இத்திட்டங்கள் யாவும் ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் ஜக்காத் நிதியைக்கொண்டும் கூட்டுகுர்பானி திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் நன்கொடைகளைக்கொண்டும் அல்லாஹ்வின் உதவியால் நடைபெற்று வருகின்றன. ஆகவே, நல்லுள்ளம் படைத்த தாங்கள் கடந்த வருடம்போல் இவ்வருடமும் அதிரை பைத்துல்மாலுக்கு தங்களுடைய ஜக்காத் நிதியை வழங்கி அல்லாஹ்வின் அளப்பரிய திருப்பொருத்தத்தை அடைந்துகொள்வீர்களாக. தங்களுக்கும் தங்கள் குடுபத்தார்களுக்கும் அல்லாஹ் இம்மை மறுமைப் பேறுகளை வழங்கிடுவானாக ஆமீன்.


தாங்கள் அனுப்ப விரும்பும் ஜக்காத் நிதிகளை அதிரை பைத்துல்மாலின் கீழ்க்கண்ட அக்கவுண்ட்டில் செக்காகவோ, D.D. யாகவோ செலுத்தலாம்.
1. ADIRAI BAITHULMAL,
DHANALAKSHMI BANK,
ADIRAMPATTINAM BRANCH,
CURRENT A/C NO. 115-53-332
2. ADIRAI BAITHULMAL,
CANARA BANK,
ADIRAMPATTINAM BRANCH,
S/B A/C NO. 120 110 102 3472
குறிப்பு : ABM-கிளைகள் கவனத்திற்கு இதனை நகல் எடுத்து அதிரை வாழ் மக்களுக்கு கொடுத்து அவர்களின் ஜகாத் நிதியை அவர்களிடமிருந்து பெற்றிட வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
அதிரை பைத்துல்மால்
அதிராம்பட்டினம் - 614 701
தஞ்சை மாவட்டம்
போன் : (+91) 04373 241690
தனவான்களே செல்வம் படைத்தோரே உங்கள் வீட்டில் உள்ள நகைகளுக்கும் உங்களிடம் குவிந்து கிடக்கும் செல்வத்திற்கும்
ReplyDeleteஉங்கள் ஜக்காத் தொகையை கணக்கு செய்து அதிரை பைத்துல்மால் மற்றும் கர்னல் அழகியக்கடன் அரக்கட்டளை ஆகியவற்றிற்கு வாரி வழங்கிவிட்டீர்களா இது அதிரையில் வட்டியை ஒழிக்கும் ஒரு யுத்தியாக திகழட்டும்
நாளடைவில் அதிரைபைத்துல்மால் ஒரு இஸ்லாமிய வங்கியாக உருவாகட்டும்
உங்களது ஜக்கத்தை (ஏழைகளின் வரியை) உடனே செலுத்துவீராக இது உங்களிடம் இருக்கும் சொத்துக்களை சுத்தம் செய்யும் இறைவன் நமக்களித்த யுத்தி
அல்லாஹ் உங்களுக்களித்த செல்வத்தை ஜக்காத் கொடுத்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
இருக்கும் சொத்துகளுக்கு ஜக்காத் கொடுக்கவில்லை என்றால் சொத்துக்கள் எந்த வழியில் தந்தானோ அப்படியே திரும்பி எடுத்துக்கொள்வான்
அதிரைமன்சூர்